கோவாவில் காங்கிரஸ் கட்சிக்கு வேட்டு வைக்கும் பாஜக; புதிய தகவலால் காங்கிரசில் பதற்றம்!!

கோவா காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 8 பேர் பாஜகவில் இணைய இருப்பதாக அந்தக் கட்சியின் மாநிலத்தலைவர் சதானந்த் ஷெட்தனவாடே தெரிவித்துள்ளார்.

Goa: Eight Congress MLAs to join BJP, says state party chief Sadanand Shet Tanavade

கோவா காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 8 பேர் பாஜகவில் இணைய இருப்பதாக அந்தக் கட்சியின் மாநிலத்தலைவர் சதானந்த் ஷெட்தனவாடே தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து மைக்கேல் லோபோ, திகம்பர் காமத் ஆகியோரும் பாஜகவுக்கு தாவுவது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவா காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவுகின்றனர் என்று கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அப்போது பாஜகவுக்கு தாவும் எம்எல்ஏக்கள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டனர். ஆனால், தற்போது மொத்தம் இருக்கும் 11 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 8 பேர் கோவா சட்டசபை சபாநாயகரை சந்தித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில்தான் இந்த எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு செல்ல இருப்பதாக அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் சதானந்த் ஷெட் தனவாடே தெரிவித்துள்ளதாக பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது காங்கிரஸ் தரப்பில் இருந்து வெளியாகி இருக்கும் செய்தியில், சபாநாயகரை எம்எல்ஏக்கள் சந்திப்பது சாதாரண நிகழ்வுதான் என்று தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களில் மொத்தம் 11 பேரில் 8 பேர் கட்சி தாவினால், கட்சி தாவல் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய முடியாது. இவர்களை இந்த சட்டம் கட்டுப்படுத்தாது. இரண்டில் மூன்று பங்கினர் கட்சி தாவும்போது, சட்ட சிக்கல் எழ வாய்ப்பில்லை.

பூஞ்ச் மாவட்டத்தில் மினி பஸ் கவிழ்ந்து 9 பேர் உயிரிழப்பு!!

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய எம்எல்ஏக்களும், மூத்த முக்கிய தலைவர்களுமான திகம்பர் காமத், மைக்கேல் லோபோ இருவருடன் மொத்தம் ஆறு எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு செல்ல இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து, திகம்பர் காமத், மைக்கேல் லோபோ இருவரையும் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யுமாறு சபாநாயகருக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதி இருந்தது.  

அப்போது ஏழு எம்எல்ஏக்களை காங்கிரஸ் தங்கள் வசம் வைத்து இருந்தது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மைக்கேல் லோபோவை அப்பதவியில் இருந்து காங்கிரஸ் நீக்கம் செய்தது. இதைத் தொடர்ந்து நடந்த கட்சியின் முக்கிய கூட்டத்தில் மைக்கேல் லோபோ, திகம்பர் காமத், கேதர் நாயக், டெலிலா லோபோ (மைக்கேல் லோபோவின் மனைவி) ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்புதான் பாஜகவில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு மைக்கேல் லோபோ கட்சி மாறி இருந்தார். தற்போது மீண்டும் பாஜகவுக்கு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவா மாநிலத்தின் காங்கிரஸ் சிக்கல்களை கையாள்வதற்கு முகுல் வாஸ்னிக்கை கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி நியமித்து இருந்தார். கடந்த 2019ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் இருந்த 15 எம்எல்ஏக்களில் 10 பேர் பாஜகவுக்கு தாவி இருந்தனர். இதனால், கட்சிக்கு விசுவாசமானவர்கள் இந்த முறை தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். அப்படி இருந்தும் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
nlem:புற்றுநோய் மருந்து, ஆன்டிபயாடிக்ஸ் விலை குறையும்! அத்தியாவசிய பட்டியலில் 34 மருந்துகள் சேர்ப்பு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios