பின்புறத்தில் செண்ட் பாட்டிலை சொருகிய நபர்… இயற்கை உபாதை கழிக்க முடியாமல் தவிப்பு… அடுத்து நடந்தது என்ன?
மேற்கு வங்கத்தில் வயிற்று வலி என்று மருத்துவமனை வந்தவரை சோதித்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் செண்ட் பாட்டில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
மேற்கு வங்கத்தில் வயிற்று வலி என்று மருத்துவமனை வந்தவரை சோதித்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் செண்ட் பாட்டில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேற்கு வங்கத்தில் உள்ள பர்த்வான் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 27 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கடும் வயிற்று வலி காரணமாக வந்துள்ளார். அவரை சோதனை செய்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் ஏழரை இன்ச் அளவுள்ள செண்ட் பாட்டில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையும் படிங்க: திருநங்கையை மணந்த கணவர்... சமதித்த மனைவி... ஒரே வீட்டில் குடும்பம் நடத்தும் வினோதம்!!
இதனையடுத்து 2 மணிநேர நீண்ட அறுவை சிகிச்சை செய்து அந்த பாட்டிலை வெளியே எடுத்த மருத்துவர்கள், பாதிக்கப்பட்டிருந்த அவரது உணவுக்குழாயையும் சீர் செய்தனர். மேலும் அவரது குடற்பகுதியும் கடும் பாதிக்கப்புள்ளாகி இருக்கும் நிலையில் அதை சரிசெய்ய மற்றொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சராசரி குடும்பத்தை பற்றி நினைக்கவில்லை! நிர்மலா சீதாராமனை விளாசிய ப.சிதம்பரம்
பின்னர் அவரது வயிற்றில் செண்ட் பாட்டில் எப்படி சென்றது என்பது குறித்து விளக்கம் அளித்த மருத்துவர்கள், மலக்குடல் வழியாக செண்ட் பாட்டிலை அந்த நபர் உட்செலுத்தியிருக்கிறார். அதன் பிறகு அவருக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக இயற்கை உபாதையை கழிக்கக் கூட முடியாமல் அவதிபட்டிருக்கிறார். அவரை குணப்படுத்துவதில் பெரும் சவாலை சந்தித்தோம். இருப்பினும் அவருக்கு கவனமாக சிகிச்சை அளித்தோம் என்று தெரிவித்தார்.