sitharaman: chidambaram: சராசரி குடும்பத்தை பற்றி நினைக்கவில்லை! நிர்மலா சீதாராமனை விளாசிய ப.சிதம்பரம்
இந்தியாவில் உள்ள சராசரி குடும்பத்தை பற்றி நினைக்கவில்லை. உணவுப் பணவீக்கம் அதிகரித்துவரும்நிலையில் தூக்கத்திலிருந்து நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் விழித்துக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் நிதிஅமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் விளாசியுள்ளார்.
இந்தியாவில் உள்ள சராசரி குடும்பத்தை பற்றி நினைக்கவில்லை. உணவுப் பணவீக்கம் அதிகரித்துவரும்நிலையில் தூக்கத்திலிருந்து நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் விழித்துக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் நிதிஅமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் விளாசியுள்ளார்.
கடந்த 3 மாதங்களாக நாட்டின் சில்லறைப் பணவீக்கம் குறைந்து வந்தநிலையில் ஆகஸ்ட் மாதத்தில் 7 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ஆகஸ்ட் சில்லறைப் பணவீக்கம் 7சதவீதமாக உயர்வு: வட்டி வீதத்தை உயர்த்த ஆர்பிஐக்கு நெருக்கடி
கடந்த ஜூலை மாதத்தில் சில்லறைப் பணவீக்கம்6.7%ஆக இருந்தநிலையில் ஆகஸ்டில் 7% அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம், உணவுப் பொருட்கள் விலை அதிகரித்ததுதான் பணவீக்கம் உயர்ந்துள்ளது.
ஆனால் நிதிஅமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “ ஆகஸ்ட் மாத சில்லறைப் பணவீக்கத்தில் பெரிதாக மாற்றம் ஏதும் இல்லை. லேசான உயர்வுதான் ஏற்பட்டுள்ளது.உணவு மற்றும் எரிபொருள் உயர்வால்தான் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக நிதிஅமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பணவீக்கத்தை 6 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி இலக்கு வைத்துள்ளது. ஆனால், கடந்த 8 மாதங்களாக பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் ரிசர்வ் வங்கி கடந்த 4 மாதங்களில் கடனுக்கான வட்டியை 140 புள்ளிகள் உயர்த்தி, 5.4% வட்டியை உயர்த்தியுள்ளது.
குஜராத்தில் ரூ.1.50 லட்சம் கோடி முதலீடு: ஒரு லட்சம் பேருக்கு வேலை: ஃபாக்ஸ்கான்-வேதாந்தா ஒப்பந்தம்
இதற்கிடையே வரும் 28 முதல் 30ம் தேதிவரை ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் குழுக் கூட்டம் நடக்க இருக்கிறது. இந்தக் கூட்டத்தின் முடிவில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மேலும் கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி உயர்த்த வேண்டிய நெருக்கடியும், அழுத்தமும் ஏற்பட்டுள்ளது. செப்டம்பர் நிதிக்கொள்கைக் கூட்டத்தின் முடிவில் குறைந்தபட்சம் கடனுக்கான வட்டி 50 புள்ளிகள்வரை உயரக்கூடும்.
இந்நிலையில் பணவீக்கம் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமனை, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விளாசியுள்ளார்.
அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ சில நாட்களுக்கு முன் மதிப்புக்குரிய நிதிஅமைச்சர் ஒருநிகழ்ச்சியில் பேசுகையில் “பணவீக்கம் என்னுடைய தலையான கவலை அல்ல என்று சில நாட்களுக்கு முன் நிதி அமைச்சர்” என்றார்.
கச்சா எண்ணெய் விலை படுவீழ்ச்சி! 158 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை ஏன்?
அவர் சொன்ன முகூர்த்தமோ என்னவோ, நாட்டின் ஆகஸ்ட் மாத சில்லறைப் பணவீக்கம் 7% என்று உயர்ந்திருக்கிறது. உணவுப் பொருட்கள் பணவீக்கம் 7.62சதவீதமாக உயர்ந்துவிட்டது.
இப்பொழுது கூட நிதி அமைச்சர் பணவீக்கத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றால் அவர் சாமானிய மக்களிடமிருந்து மிக விலகி நிற்கிறார் என்ற எண்ணம் உறுதிப்படுகிறது” எனத் தெரிவித்தார்.