பெற்றோர் கொலை மிரட்டல் விடுத்து வருவதால் இளம் லெஸ்பியன் ஜோடிக்கு பாதுகாப்பு கொடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 ராஜஸ்தானை சேர்ந்தவர் ஆஸ்னா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரும் இவரது வீட்டுக்கு அருகே வசித்து வந்த ஜெலினாவும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சிறுவயது முதலே நெருங்கிய தோழிகள். ஒரு கட்டத்தில் ஒருவர் மீது ஒருவருக்கு பாலியல் ரீதியில் ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆஸ்னாவும் – ஜெலினாவும் ஓரினச்சேர்க்கையாளர்களாக மாறியுள்ளனர்.

நேரமும் வாய்ப்பும் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். ஒரு நாள் ஆஸ்னா – ஜெலினா நெருக்கமாக இருப்பதை ஆஸ்னாவின் பெற்றோர் பார்த்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் தகவலை ஜெலினா பெற்றோருக்கும் கூறியுள்ளனர். உடனடியாக ஆஸ்னா பெற்றோர் தங்கள் மகளை அழைத்துக் கொண்டு வேறு வீட்டில் குடிபெயர்ந்தனர்.

ஆனாலும் கூட ஆஸ்தான செல்போன் மூலம் ஜெலினாவுடன் தொடர்ந்து பேசியுள்ளார். இந்த நிலையில் தான் ஓரினச்சேர்க்கைக்கு அங்கீகாரம் கொடுத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து ஆஸ்னாவும் – ஜெலினாவும் வீட்டை விட்டு வெளியேறி ராஜஸ்தானில் இருந்து டெல்லிக்கு வந்துள்ளனர். டெல்லியில் இருவரும் ஒன்றாக வாழ திட்டமிட்டிருந்த நிலையில் அவர்களை பெற்றோர் கண்டுபிடித்துள்ளனர்.

ஆனால் பெற்றோருடன் செல்ல ஆஸ்னாவும் ஜெலினாவும் மறுத்துவிட்டனர். காவல்நிலையத்தில் புகார் அளித்தும் பெற்றோருடன் செல்லவே இருவருக்கும் அதிகாரிகள் அறிவுரை வழங்கினர். இதனை தொடர்ந்து ஒரு சமுக அமைப்பு மூலம் டெல்லி உயர்நீதிமன்றத்தை ஆஸ்னாவும் – ஜெலினாவும் அணுகினர். தங்களுக்கு 21 வயது ஆகிவிட்டதாகவும் பெற்றோருடன் செல்ல விரும்பவில்லை என்றும் இருவரும் நீதிபதியிடம் தெரிவித்தனர்.

 இதனை தொடர்ந்து டெல்லியில் ஆஸ்னாவும் – ஜெலினாவும் தங்கியுள்ள இடத்திற்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து லெஸ்பியன் ஜோடிகளான ஆஸ்னா – ஜெலினாவுக்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.