பதக்கங்களை கங்கை நதியில் வீச வந்த வீரர், வீராங்கனைகள்... தடுத்து நிறுத்தி போலீஸார் பேச்சுவார்த்தை!!

பதக்கங்களை கங்கை நதியில் வீச வந்த வீரர், வீராங்கனைகளை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

police are holding talks with the players who came to throw the medals into the river ganga

பதக்கங்களை கங்கை நதியில் வீச வந்த வீரர், வீராங்கனைகளை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தேசிய மல்யுத்த பயிற்சி முகாமில் பயிற்சி பெறும் வீராங்கனைகள் அங்குள்ள பயிற்சியாளர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாகவும், மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கால் 10க்கும் அதிகமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் குற்றம்சாட்டி உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற சுமார் 30 வீரர், வீராங்கனைகள் கடந்த ஜனவரியில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையும் படிங்க:  அணையில் தவறி விழுந்த செல்போனை எடுக்க 42 லட்சம் லிட்டர் நீரை வீணடித்த அதிகாரிக்கு ரூ.53 ஆயிரம் அபராதம்

police are holding talks with the players who came to throw the medals into the river ganga

மேலும் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவின் போது அந்த வளாகத்தில் மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தங்களுடைய ஒலிம்பிக் பதக்கங்களை புனிதமான கங்கை நதியில் வீசுவதாக ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகிய வீரர்கள் அறிவித்துள்ளனர்.  

இதையும் படிங்க:  மல்யுத்த வீராங்கனைகள் போராட்ட விவகாரம்… குற்றம்சாட்டப்பட்டவர் கைது செய்யப்படாதது ஏன்? மம்தா கேள்வி!!

police are holding talks with the players who came to throw the medals into the river ganga

அதன்படி, வீரர் வீராங்கனைகள் தங்களது வீடுகளில் இருக்கும் பதக்கங்களை பையில் போட்டு எடுத்து வரும் காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்துகிறது. ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வென்ற சாக்‌ஷி மாலிக், வினோத் போகத் உள்ளிட்டோர் பதக்கங்களுடன் தரையில் அமர்ந்து கண்ணீர் வடித்து வருகின்றனர். ஒலிம்பிக் மற்றும் சர்வதேச அளவில் வென்ற பதக்கங்களை கங்கை நதியில் வீச வந்த வீரர், வீராங்கனைகளை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios