“ஜவஹர்லால் நேரு சரியான நடவடிக்கைகளை எடுத்திருந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இப்போது இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்கும்; இது வரலாற்றுத் தவறு” என்று மக்களவையில் அமித் ஷா கூறினார்.

ஜம்மு-காஷ்மீர் இடஒதுக்கீடு (திருத்த) மசோதா 2023 மற்றும் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்த) மசோதா 2023 ஆகிய இரண்டு மசோதாக்கள் மக்களவையில் ஒப்புதலுக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதன்கிழமை தெரிவித்தார்.

இந்த மசோதாக்கள் அநீதியை எதிர்கொண்ட, அவமதிக்கப்பட்ட மற்றும் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு உரிமைகளை வழங்குவது தொடர்பானவை என்றும் அரவ் கூறினார். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் ஜம்மு காஷ்மீர் இரண்டு தவறுகளை சந்தித்துள்ளது என்றும் அமித்ஷா குறை கூறினார்.

பாஜகவுக்கு 2 நாள் முன்பே தேர்தல் முடிவுகள் தெரிந்துவிட்டது: திக்விஜய் சிங் குற்றச்சாட்டு

“ஜவஹர்லால் நேரு சரியான நடவடிக்கைகளை எடுத்திருந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இப்போது இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்கும்; இது வரலாற்றுத் தவறு” என்று மக்களவையில் அமித் ஷா மேலும் கூறினார்.

Scroll to load tweet…

"ஜம்மு-காஷ்மீர் இரண்டு தவறுகளால் பாதிக்கப்பட்டுள்ளது. முதல் தவறு, நமது இராணுவம் வெற்றி அடைந்து வந்த சமயத்தில் போர்நிறுத்தத்தை அறிவித்தது. மூன்று நாட்களுக்குப் பிறகு போர்நிறுத்தம் இருந்திருந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இன்று இந்தியாவின் பகுதியாக இருந்திருக்கும்... இரண்டாவதாக, உள்நாட்டுப் பிரச்சினையை ஐக்கிய நாடுகள் சபைக்கு எடுத்துச் சென்றது" என அமித் ஷா சுட்டிக்காட்டினார்.

பாஜக அரசு எடுத்த நடவடிக்கைகளால் கடந்த 3 ஆண்டுகளால் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதச் சம்பவம் ஏதும் நிகழ்வில்லை என்றும் அமித் ஷா கூறினார். 2026-ம் ஆண்டுக்குள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரை நாம் வெற்றி கொள்வோம் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இந்த மசோதாக்கள் மீதான விவாதத்திற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர், இந்த மசோதாக்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே அகதி நிலைக்குத் தள்ளப்பட்டவர்களுக்கு நீதி வழங்க முயல்கின்றன என்று கூறினார். உரிமைகளை வழங்குவதற்கும் மரியாதையுடன் உரிமைகளை வழங்குவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது என்றும் அமித் ஷா தெரிவித்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் வென்ற 10 பாஜக எம்.பி.க்கள் ராஜினாமா! முதல்வராகும் வாய்ப்பு யாருக்கு?