Asianet News TamilAsianet News Tamil

வந்தே பாரத் ரயில்களை காணொலி வாயிலாக தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

நாடு முழுவதும் 9 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளார்

PM will flag 9 Vande Bharat trains via video conferencing today
Author
First Published Sep 24, 2023, 10:00 AM IST

வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடி அதனை தொடங்கி வைத்து வருகிறார். அந்த வகையில், தற்போது மொத்தம் 25 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நாடு முழுவதும் 9 வந்தே பாரத் ரயில்களை காணொலி காட்சி வாயிலாக மதியம் 12:30 மணியளவில் கொடியசைத்து பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார்.

பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கும் ரயில்கள்
** உதய்பூர் - ஜெய்ப்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
** திருநெல்வேலி-மதுரை-சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
** ஹைதராபாத் - பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
** விஜயவாடா - சென்னை (ரேணிகுண்டா வழியாக) வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
** பாட்னா - ஹவுரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
** காசர்கோடு - திருவனந்தபுரம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
** ரூர்கேலா - புவனேஸ்வர் - பூரி  வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
** ராஞ்சி - ஹவுரா  வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
** ஜாம்நகர்-அகமதாபாத்  வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்கம், கேரளா, ஒடிசா, ஜார்க்கண்ட் மற்றும் குஜராத் ஆகிய 11 மாநிலங்களில் இந்த ஒன்பது ரயில்கள் போக்குவரத்து இணைப்பை அதிகரிக்கும். இந்த வந்தே பாரத் ரயில்கள் அவற்றின் இயக்கப்படும் வழித்தடங்களில் அதிவேக ரயிலாக இருக்கும் மற்றும் பயணிகளின் கணிசமான நேரத்தை மிச்சப்படுத்த உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழித்தடத்தில் தற்போதுள்ள அதிவேக ரயிலுடன் ஒப்பிடும்போது, ரூர்கேலா - புவனேஸ்வர் - பூரி  வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் காசர்கோடு - திருவனந்தபுரம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகியவை சுமார் 3 மணி நேரத்துக்கு முன்னதாக சென்றடையும். ஹைதராபாத் - பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 2.5 மணி நேரம் முன்னதாக சென்றடையும்.

ஒரே மாதத்தில் 5 மரணங்கள்... அழிவின் விளம்பில் அரிய வகை இமாலய கஸ்தூரி மான்கள்

நெல்லை-மதுரை-சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் வழக்கமான பயண நேரத்தைக் காட்டிலும் 2 மணி நேரத்திற்கு முன்னதாக சென்றடையும். ராஞ்சி - ஹவுரா  வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்,  பாட்னா - ஹவுரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் ஜாம்நகர் - அகமதாபாத் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சுமார் 1 மணி நேரமும், உதய்பூர் - ஜெய்ப்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சுமார் அரை மணி நேரமும் முன்னதாக சென்றடையும்.

நாடு முழுவதும் உள்ள முக்கிய வழிபாட்டுத் தலங்களின் இணைப்பை மேம்படுத்துவதற்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, ரூர்கேலா - புவனேஸ்வர் - பூரி  வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் திருநெல்வேலி - மதுரை - சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகியவை முக்கிய வழிபாட்டு நகரங்களான பூரி மற்றும் மதுரையை இணைக்கும். மேலும், ரேணிகுண்டா வழியாக இயக்கப்படும் விஜயவாடா - சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் திருப்பதி ஏழுமையான் கோயிலுக்கான இணைப்பை வழங்கும்.

இந்த வந்தே பாரத் ரயில்களை அறிமுகப்படுத்துவது நாட்டில் ரயில் சேவையின் புதிய தரத்தை பிரதிபலிக்கும். உலகத் தரம் வாய்ந்த வசதிகள் மற்றும் கவாச் தொழில்நுட்பம் உள்ளிட்ட மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட இந்த ரயில்கள், சாதாரண மக்கள், தொழில் வல்லுநர்கள், வணிகர்கள், மாணவர் சமூகம் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு நவீன, விரைவான மற்றும் வசதியான பயண வழிமுறைகளை வழங்குவதற்கான ஒரு முக்கியப் படியாக இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios