Asianet News TamilAsianet News Tamil

ஒரே மாதத்தில் 5 மரணங்கள்... அழிவின் விளம்பில் அரிய வகை இமாலய கஸ்தூரி மான்கள்

செப்டம்பர் 3 முதல் 21 வரை ஐந்து கஸ்தூரி மான்கள் இறந்துவிட்டன. இதில் மூன்று பெண் மற்றும் இரண்டு ஆண் மான்கள் அடங்கும்.

5 endangered Himalayan musk deer die in a month sgb
Author
First Published Sep 24, 2023, 9:20 AM IST | Last Updated Sep 24, 2023, 9:32 AM IST

உத்தரகாண்ட் மாநிலம் பாகேஷ்வர் மாவட்டத்தில் உள்ள கஸ்தூரி மான் ஆராய்ச்சி மையம், மற்றொரு ஆண் இமாலய கஸ்தூரி மான் இறந்துள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளது. இமாலய கஸ்தூரி மான்கள் அழிந்து வரும் உயிரினமாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த மாதம் உயிரிழந்த இமாலய கஸ்தூரி மான்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

பரேலியில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் இறுதி அறிக்கை இன்னும் நிலுவையில் உள்ளதால், இந்த இறப்புக்கான காரணம் தெரியவில்லை என்று கஸ்தூரி மான் ஆராய்ச்சி மையத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். உயிரிழந்த மானுக்கு முழங்கால் வீக்கம் மற்றும் வயிற்றுப் பிரச்சினைகள் இருந்ததாகவும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.

பிரக்யான் ரோவர் நிலவில் தேசியச் சின்னத்தை தெளிவாகப் பதிவு செய்யவில்லை: இஸ்ரோ தகவல்

செப்டம்பர் 3 முதல் 13 வரை நான்கு கஸ்தூரி மான்கள் இறந்துவிட்டன. அதில் மூன்று பெண் மற்றும் ஒரு ஆண் மான்கள் அடங்கும். செப்டம்பர் 21ஆம் தேதி ஐந்தாவதாக இன்னொரு ஆண் கஸ்தூரி மான் உயிரிழந்திருக்கிறது.

5 endangered Himalayan musk deer die in a month sgb

இறந்த கஸ்தூரி மான்களுக்கு வயிற்றுப்போக்கு இருந்ததாக முதற்கட்ட பரிசோதனையில் தெரிந்திருக்கிறது என மாவட்ட முதன்மை கால்நடை மருத்துவ அதிகாரி டாக்டர் கமல் பந்த் சொல்கிறார். இருப்பினும், உண்மையான காரணத்தை அறிந்துகொள்வதற்கு பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்க வேண்டும் எனவும் அறிக்கை வர ஒரு மாதம் வரை ஆகலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பாகேஷ்வர் கஸ்தூரி மான் ஆராய்ச்சி மையத்தில் 6 பெண்கள் உட்பட 12 இமாலய கஸ்தூரி மான்கள் உள்ளன. 1990 களில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி உத்தரகாண்டில் உள்ள இமாலய கஸ்தூரி மான்கள் எண்ணிக்கை 600 முதல் 800 வரை இருக்கும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆனால், இமாலய கஸ்தூரி மான்கள் குறித்த சமீபத்திய கணக்கெடுப்பு விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

பேமானி முதல் கேப்மாரி வரை... சென்னை தமிழில் ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னும் ஒரு கதை இருக்கு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios