நாளை ஜம்மு செல்கிறார் பிரதமர் மோடி.. ரூ.30,500 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்..

நாளை ஜம்மு செல்லும் பிரதமர் மோடி ரூ. 30,500 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் தொடக்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.

PM to visit Jammu on Feb 20 to inaugurate and lay foundation of various projects worth over Rs 30,500 crore Rya

பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்கவும், பிரதமர் நரேந்திர மோடி நாளை ஜம்மு செல்கிறார். நா:அஒ காலை 11:30 மணியளவில், ஜம்முவில் உள்ள மவுலானா ஆசாத் மைதானத்தில் நடைபெறும் நிகழ்சியில், பிரதமர், 30,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கவும், அடிக்கல் நாட்டவும் உள்ளார். மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்1500 பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் வழங்க உள்ளார். ‘விக்சித் பாரத் விக்சித் ஜம்மு’ திட்டத்தின் ஒரு பகுதியாக, பல்வேறு அரசு திட்டங்களின் பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாட உள்ளார். .

கல்வித்துறைக்கு முக்கியத்துவம்

நாடு முழுவதும் கல்வி மற்றும் திறன் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கு, சுமார் ரூ.13,375 கோடி மதிப்பிலான பல திட்டங்களுக்கு பிரதமர் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். ஐஐடி பிலாய், ஐஐடி திருப்பதி, ஐஐடி ஜம்மு, ஐஐஐடிடிஎம் காஞ்சிபுரம் ஆகியவற்றின் நிரந்தர வளாகம் போன்ற திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். 

மேலும் ஐஐஎம் ஜம்மு, ஐஐஎம் போத்கயா மற்றும் ஐஐஎம் விசாகப்பட்டினம் ஆகிய மூன்று புதிய ஐஐஎம்களை பிரதமர் திறந்து வைக்கிறார். நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயா (கேவி) 20 புதிய கட்டிடங்கள், 13 புதிய நவோதயா வித்யாலயா (என்வி) கட்டிடங்களையும் மோடி திறந்து வைக்க உள்ளார். இவை தவிர நாடு முழுவதும் உள்ள ஐந்து கேந்திரிய வித்யாலயா வளாகங்கள், ஒரு நவோதயா வித்யாலயா வளாகம் மற்றும் ஐந்து பல்நோக்கு அரங்குகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார். புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளி கட்டிடங்கள் நாடு முழுவதும் உள்ள மாணவர்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

எய்ம்ஸ் ஜம்மு

ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்களுக்கு விரிவான, தரமான மற்றும் முழுமையான மூன்றாம் நிலை சுகாதார சேவைகளை வழங்கும் வகையில், ஜம்முவில் உள்ள விஜய்பூர் (சம்பா), அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தை (AIIMS) பிரதமர் திறந்து வைக்க உள்ளார்.. கடந்த 2019-ம் ஆண்டு பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த நிறுவனம், மத்திய துறை திட்டமான பிரதான் மந்திரி ஸ்வஸ்த்ய சுரக்ஷா யோஜனாவின் கீழ் நிறுவப்பட்டது.

1660 கோடி செலவில் 227 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனையில் 720 படுக்கைகள், மருத்துவக் கல்லூரி 125 இடங்கள், செவிலியர் கல்லூரி 60 இடங்கள், ஆயுஷ் பிளாக் 30 படுக்கைகள், ஆசிரியர்களுக்கான குடியிருப்புகள் மற்றும் தங்குமிட வசதிகளுடன் உள்ளது. ஊழியர்கள், இளங்கலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான விடுதி தங்குமிடம், இரவு தங்குமிடம், விருந்தினர் மாளிகை, ஆடிட்டோரியம், வணிக வளாகம் போன்றவையும் உள்ளன. மேலும். அதிநவீன மருத்துவமனையானது 18 சிறப்புப் பிரிவுகளில் உயர்தர நோயாளி பராமரிப்புச் சேவைகளையும், இதய நோய், காஸ்ட்ரோ- என்டரோலஜி, நெப்ராலஜி, யூரோலஜி, நியூராலஜி, நியூரோ சர்ஜரி, மெடிக்கல் ஆன்காலஜி, சர்ஜிக்கல் ஆன்காலஜி, எண்டோகிரைனாலஜி, பர்ன்ஸ் & பிளாஸ்டிக் சர்ஜரி. இந்த நிறுவனத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, 20 மாடுலர் ஆபரேஷன் தியேட்டர்கள், நோயறிதல் ஆய்வகங்கள், இரத்த வங்கி, மருந்தகம் போன்றவை இருக்கும். மருத்துவமனையானது டிஜிட்டல் ஹெல்த் உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி பிராந்தியத்தின் தொலைதூரப் பகுதிகளுக்குச் சென்று சேரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்லது.

ஜம்மு விமான நிலையம் - புதிய முனையம்

ஜம்மு விமான நிலையத்தில் புதிய முனைய கட்டிடத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார். 40,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனையக் கட்டிடம், பீக் ஹவர்ஸில் சுமார் 2000 பயணிகளுக்கு நவீன வசதிகளுடன் கூடியதாக இருக்கும். புதிய முனைய கட்டிடம் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும் மற்றும் பிராந்தியத்தின் உள்ளூர் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் கட்டப்படும். இது விமான இணைப்பை வலுப்படுத்தும், சுற்றுலா மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்தும் மற்றும் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரயில் திட்டங்கள்

பனிஹால்-காரி-சம்பர்-சங்கல்தான் (48 கிமீ) மற்றும் புதிதாக மின்மயமாக்கப்பட்ட பாரமுல்லா-ஸ்ரிங்கர்-பனிஹால்-சங்கல்தான் பகுதி (185.66 கிமீ) இடையே புதிய ரயில் பாதை உட்பட ஜம்மு & காஷ்மீரில் பல்வேறு ரயில் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். மேலும் ஜம்முவில் முதல் மின்சார ரயிலையும், சங்கல்தான் ஸ்டேஷன் மற்றும் பாரமுல்லா ஸ்டேஷன் இடையே ரயில் சேவையையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

விவசாயிகள் போராட்டத்தை வைத்து சதித்திட்டம் தீட்டும் பாகிஸ்தான்! வைரல் ஆடியோவைக் கேளுங்க!

சாலை திட்டங்கள்

ஜம்முவை கத்ராவுடன் இணைக்கும் டெல்லி-அமிர்தசரஸ்-கத்ரா விரைவுச் சாலையின் இரண்டு தொகுப்புகள் (44.22 கிமீ) உட்பட முக்கியமான சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார். தில்லி-அமிர்தசரஸ்-கத்ரா விரைவுச் சாலையின் இரண்டு தொகுப்புகளின் பணிகள் முடிவடையும் பட்சத்தில் புனித தலமான மாதா வைஷ்ணோ தேவிக்கு யாத்ரீகர்களின் வருகையை எளிதாக இருக்கும் என்றும், மேலும் இப்பகுதியில் பொருளாதார வளர்ச்சியையும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்ப்படுகிறது.

ஸ்ரீநகர் ரிங் ரோட்டை நான்கு வழிப்பாதையாக மாற்றுவதற்கான இரண்டாம் கட்டமானது, தற்போதுள்ள சும்பல்-வாயுல் NH-1 ஐ மேம்படுத்துவதை உள்ளடக்கியது. 24.7 கிமீ நீளமுள்ள இந்த பிரவுன்ஃபீல்ட் திட்டம், ஸ்ரீநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும். இது மனஸ்பால் ஏரி மற்றும் கீர் பவானி கோயில் போன்ற பிரபலமான சுற்றுலாத் தலங்களுக்கான இணைப்பை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது., மேலும் லே, லடாக்கிற்கான பயண நேரத்தையும் குறைக்கும்; NH-01 இன் 161 கிமீ நீளமுள்ள ஸ்ரீநகர்-பாரமுல்லா-உரி பாதையை மேம்படுத்துவதற்கான திட்டம், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தது. இது பாரமுல்லா & உரியின் பொருளாதார வளர்ச்சியையும் அதிகரிக்கும்; குல்காம் பைபாஸ் & புல்வாமா பைபாஸ் NH-444 இல் காசிகுண்ட் - குல்கம் - ஷோபியான் - புல்வாமா - பத்காம் - ஸ்ரீநகர் ஆகியவற்றை இணைக்கிறது.

ஆன்லைனில் பாஸ்போர்ட்டை புதுப்பிப்பது எப்படி? என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்?

CUF பெட்ரோலியக் கிடங்கு

ஜம்முவில் CUF (Common User Facility) பெட்ரோலியக் கிடங்கை உருவாக்கும் திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார். சுமார் 677 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும் நவீன முழுமையான தானியங்கி கிடங்கு, மோட்டார் ஸ்பிரிட் (MS), அதிவேக டீசல் (HSD), சுப்பீரியர் மண்ணெண்ணெய் (SKO), ஏவியேஷன் டர்பைன் எரிபொருள் (ATF), எத்தனால், பயோ டீசல் மற்றும் குளிர்கால தர HSD. ஆகியவற்றை சேமிப்பதற்காக சுமார் 100000 KL சேமிப்பு திறன் கொண்டதாக இருக்கும்.

மற்ற திட்டங்கள்

ஜம்மு மற்றும் காஷ்மீர் முழுவதும் குடிமை உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும், பொது வசதிகளை வழங்குவதற்கும் ரூ.3150 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் தொடக்கி வைத்து அடிக்கல் நாட்ட உள்ளார். பிரதமரால் தொடங்கி வைக்கப்படும் திட்டங்களில், சாலைத் திட்டங்கள் & பாலங்கள்; கிரிட் நிலையங்கள், பொதுவான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்; பல கல்லூரி கட்டிடங்கள்;  ஜம்மு ஸ்மார்ட் சிட்டியின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கான தரவு மையம்/ பேரிடர் மீட்பு மையம்; பரிம்போரா ஸ்ரீநகரில் போக்குவரத்து நகரை மேம்படுத்துதல்; அனந்த்நாக், குல்காம், குப்வாரா, சோபியான் & புல்வாமா மாவட்டங்களில் ஒன்பது இடங்களில் 2816 குடியிருப்புகள் - 62 சாலைத் திட்டங்கள் மற்றும் 42 பாலங்கள் மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டம் ஆகியவை அடங்கும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios