Mahashivratri 2025 : கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற இருக்கும் மஹாசிவராத்திரி விழா வெற்றி பெற பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Mahashivratri 2025 : ஒவ்வொரு ஆண்டும் மஹாசிவராத்திரி நாளில் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் பிரம்மாண்டமாக விழா நடைபெறும். இதில், சினிமா பிரபலங்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொள்வது வழக்கம். அந்த வகையில் 2025ஆம் ஆண்டுக்கான மஹா சிவராத்திரி வரும் 26ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதன் காரணமாக பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சத்குருவின் தலைமையில் கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரி விழா வெற்றி பெற வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த சத்குரு, சிவராத்திரியின் மகத்துவத்தை அனைவரும் உணர வேண்டும் என்று கூறியுள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து குறிப்பில் கூறியிப்பதாவது: கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மஹாசிவராத்திரி விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் ஈடுபட்டிருக்கும் ஈஷா யோகா மைய அறக்கட்டளையைச் சேர்ந்த அனைவருக்கும் சிவபெருமானின் எண்ணற்ற பக்தர்களுக்கும் வாழ்த்துக்கள். இந்துக்கள் கொண்டாடும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று மஹாசிவராத்திரி. இந்த சிவராத்திரி விழாவானது ஆன்மீக ரீதியில் நம்மை மேம்படுத்திக் கொள்ளவும், விரதம், தியானம், அறியாமை ஆகியவற்றின் மீதான அறிவின் வெற்றியையும் குறிக்கிறது.

மஹாசிவராத்திரி என்பது சிவனுக்கும், பார்வதிக்கும் திருமணம் நடைபெற்ற நாள். இந்த நாளில் இரவு முழுவதும் தூங்கமல் இருந்து பக்தி, பிராத்தனைகள், சுயகட்டுப்பாடு ஆகியவற்றின் மூலமாக ஆன்மீக ரீதியாக பக்தர்கள் முன்னேறவும், உயர்ந்த தெய்வீக சிந்தனையுடம் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும். அதோடு நாட்டின் பல்வேறு இடங்களில் ஆதியோகி சிலைகளை நிறுவும் முயற்சியைப் பற்றி அறிந்து கொள்வது என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. சிவபெருமானின் அருள் பெற சத்குரு தலைமையில் நடைபெறும் 2025 ஈஷா மஹாசிவராத்திரி விழா வெற்றியாக அமையட்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

இதற்கு நன்றி தெரிவித்த சத்குரு தனது எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: இந்திய மக்கள் கொண்டாடும் மிக முக்கிய பண்டிகைகளி ஒன்று சிவராத்திரி. இதனுடைய மகத்துவத்தை உணர வேண்டும். மனித குலத்தின் எதிர்காலத்திற்கு ஆதியோகியின் பங்களிப்பு ரொம்பவே முக்கியமானது. மனித குலத்திற்கான எல்லா பிரச்சனைகளுக்கு, அதற்கான தீர்வு நமக்குள் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.