புனித ரமலான் மாதத்தில் நோன்பைத் தொடங்கும் இஸ்லாமியர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ரமலான் மாதம் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் செழிப்பைக் கொண்டு வரட்டும் என்று கூறியிருக்கிறார்.

ரம்ஜான் திருநாளை முன்னிட்டு அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த புனிதமான மாதம் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் செழிப்பைக் கொண்டுவரட்டும் என்று பிரதமர் மோடி தனது செய்தியில் கூறியுள்ளார்.

இஸ்லாமியர்கள் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது வழக்கம். ரமலான் பிறை தொடங்கிய நாளை வைத்து ரமலான் நோன்பு ஆரம்பம் ஆகிறது. ரமலான் மாதத்தின் கடைசி நாளில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.

Scroll to load tweet…

அதன்படி 2024ஆம் ஆண்டில் ரமலான் நோன்பு இன்று முதல் தொடங்கி இருக்கிறது. இதனை தலைமை காஜி அறிவித்துள்ளார். புனித ரமலான் மாதத்தில் நோன்பைத் தொடங்கும் இஸ்லாமியர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ரமலான் வாழ்த்துகளைக் கூறியுள்ளார். "அனைவருக்கும் ரம்ஜான் மாத வாழ்த்துக்கள். இந்தப் புனிதமான மாதம் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் செழிப்பைக் கொண்டு வரட்டும்" என்று பிரதமர் மோடி தனது வாழ்த்துச் செய்தியில் கூறியிருக்கிறார்.