நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் இன்று மாலை நான்கு மணிக்கு பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசவுள்ளார்

மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் இன்று மாலை நான்கு மணிக்கு பிரதமர் மோடி கலந்து கொள்ளவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக கடந்த ஜூலை மாதம் 26ஆம் தேதி மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மக்களவை துணைத் தலைவர் அசாம் மாநில எம்.பி.யுமான கவுரவ் கோகோய் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருமாறு நோட்டீஸ் வழங்கினார். மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடியை அவைக்கு வரவழைத்து பேச வைப்பதற்காகவே இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

இந்தியாவில் அதிகரிக்கும் உறுப்பு தானம்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!

அந்த தீர்மானம் விவாதத்துக்கு ஏற்றுக் கொள்ளப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். அதன்படி, நேற்று முன் தினமும், நேற்றும் மத்திய அரசுக்கு எதிரான தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி இன்று பதிலுரை ஆற்றவுள்ளார்.

Scroll to load tweet…

இந்த நிலையில், மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் இன்று மாலை நான்கு மணிக்கு பிரதமர் மோடி கலந்து கொள்ளவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சிகள், ஆளுங்கட்சியின் விவாதம் முடிந்த நிலையில், பிரதமர் மோடி இன்று பதிலுரையாற்றவுள்ளார். அப்போது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதில் அளிப்பார் என தெரிகிறது.