காலை 11 மணி..! நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி..!

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 11 மணி அளவில் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். அதன்படி இந்த மாதத்திற்கான மன் கி பாத் என்கிற 'மனதின் குரல்' நிகழ்ச்சி இன்று காலை 11 மணியளவில் தொடங்க இருக்கிறது.
 

Pm modi will address nation in mann ki baat program

கடந்த 2014ம் ஆண்டு முதல் முறையாக பிரதமராக பொறுப்பேற்றதிலிருந்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் நேரடியாக உரையாடும் விதமாக மன் கி பாத் என்ற 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பேசி வருகிறார். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 11 மணி அளவில் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். அதன்படி இந்த மாதத்திற்கான மன் கி பாத் என்கிற 'மனதின் குரல்' நிகழ்ச்சி இன்று காலை 11 மணியளவில் தொடங்க இருக்கிறது.

Pm modi will address nation in mann ki baat program

அப்போது பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொள்ள இருக்கிறார். தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தனது கோர முகத்தைக் காட்டத் தொடங்கியுள்ளது. இதுவரையில் 26,496 பேர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 825 பேர் இந்தியாவில் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. மக்கள் சமூக விலகலை கடைபிடிக்கும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில் இனி வரும் நாட்களில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Pm modi will address nation in mann ki baat program

மேலும் மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகள் குறித்தும் தனது உரையில் பிரதமர் குறிப்பிடக்கூடும் .இது பிரதமர் மோடி கலந்து கொள்ளும் 64வது மனதின் குரல் நிகழ்ச்சி ஆகும். இந்நிகழ்ச்சியை அனைத்திந்திய வானொலி மற்றும் அனைத்து தூர்தர்சன் நெட்வொர்க்கிலும் கேட்க முடியும். ஹிந்தி மொழியில் ஒளிபரப்பப்பட்ட உடனேயே பிராந்திய மொழிகளில் ஒளிபரப்பப்படும். பிராந்திய மொழி பதிப்புகளுக்கு இரவு 8 மணி அளவில் மீண்டும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios