Asianet News TamilAsianet News Tamil

National Youth Festival: ஹூப்ளியில் தேசிய இளைஞர் திருவிழா இன்று தொடக்கம்

கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் 5 நாட்கள் நடக்கும் தேசிய இளைஞர் தின விழாவை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைக்கிறார்.

PM Modi to inaugurate National Youth Festival 2023 in Karnataka's Hubballi today
Author
First Published Jan 12, 2023, 10:42 AM IST

ஒவ்வொரு ஆண்டும் சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளான ஜனவரி 12ஆம் தேதி தேசிய இளைஞர் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் ஜனவரி 12 முதல் ஜனவரி 16 வரை 26வது தேசிய இளைஞர் திருவிழா 2023 நடைபெறுகிறது.

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள இந்த விழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

இந்த விழாவில் பங்கேற்ப இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “சுவாமி விவேகானந்தரின் இலட்சியங்கள் நம் இளைஞர்களை வழிநடத்தி, தேசத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் உழைக்க அவர்களைத் தூண்டட்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் நாக்கை அறுத்தால் ரூ.10 கோடி! அயோத்தி மடாதிபதி அறிவிப்பு

நாடு முழுவதும் உள்ள இளைஞர்களின் ஆற்றலைப் பறைசாற்றும் வகையில் இந்தத் திருவிழா நடைபெறும். இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்துகொள்கின்றனர். ஐந்து நாட்கள் நடக்கும் நிகழ்வுகளில் வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த 7500 வல்லுநர்களும் பங்கேற்க உள்ளனர்.

“ஐந்து நாள் நிகழ்வில் பல்வேறு கலை மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறும். முதல் முறையாக தேசிய இளைஞர் நாள் திருவிழாவை நடத்தும் வாய்ப்பு கர்நாடகாவுக்குக் கிடைத்துள்ளது.” என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

போபால் விஷவாயு கசிவுக்கு கூடுதல் இழப்பீடு கேட்பது ஏன்?: உச்ச நீதிமன்றம் கேள்வி

பிரதமர் விமான நிலையத்திலிருந்து பேரணியாகச் செல்ல இருப்பதாகவும் பொதுமக்கள் சாலை ஓரங்களில் நின்று பார்வையிட வசதி செய்யப்பட்டுள்ளதாவும் முதல்வர் பொம்மை கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்த விழாவில் மாணவர்களை மையப்படுத்திய நிர்வாகம், சாகச விளையாட்டுகள், பாரம்பரிய விளையாட்டுகள், கலை போட்டிகள் ஆகியவை நடைபெற உள்ளன எனவும் குறிப்பிட்டார்.

Follow Us:
Download App:
  • android
  • ios