உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அரசியல் பிரபலங்கள் பலரும் பொங்கல் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாரத பிரதமர் நரேந்திர மோடியும் தனது பங்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: உங்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். இந்த பண்டிகை நம் சமூகத்தில் ஒற்றுமையின் பிணைப்பை மேலும் வலுப்படுத்த நான் பிரார்த்திக்கிறேன் என்று கூறிய பொங்கல் வாழ்த்து மடலில் அவர் கையெழுத்திட்டுள்ளார். அதுமட்டுமின்றி, அனைவருக்கும் குறிப்பாக உலக தமிழக மக்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்கள். இந்தப் பண்டிகை நம் வாழ்வில் மகிழ்ச்சியையும் அற்புதமான ஆரோக்கியத்தையும் தரட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…

இந்த நிலையில், நாட்டின் 8ஆவது வந்தே பாரத் அதிவிரைவு ரயிலை பிரதமர் காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார். செகந்திரபாத் ரயில் நிலையத்திலிருந்து விசாகப்பட்டினத்துக்கு இந்த வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களை இணைக்கும் வகையில் இந்த ரயில் சேவை அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: பொங்கல் பண்டிகை கோலாகலம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து...

இதையும் படியுங்கள்: Avaniyapuram Jallikattu: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! வீரர்கள் உறுதிமொழியுடன் தொடக்கம்!