43 ஆண்டுகளுக்குப் பிறகு குவைத் போன பிரதமர் மோடிக்கு விமர்சையான வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்திலிருந்து ஹோட்டல் வரைக்கும் பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெற்றது.

பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை இரண்டு நாள் பயணமாக குவைத் சென்றுள்ளார். அங்கு அவருக்கு விமான நிலையத்திலிருந்து ஹோட்டல் வரைக்கும் பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. நிறைய இந்தியர்களும் மோடியை வரவேற்க வந்திருந்தார்கள். பிரதமர் மோடி, குவைத்தில் உள்ள 101 வயதான முன்னாள் இந்திய ஐஎஃப்எஸ் அதிகாரி மங்கள் சேன் ஹாண்டாவையும் சந்தித்தார்.

43 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு இந்தியப் பிரதமர் குவைத் சென்றிருக்கிறார். இதற்கு முன்பாக, 1981ஆம் ஆண்டில் பிரதமராக இருந்த இந்திரா காந்தி குவைத் சென்றிருக்கிறார்.

மோடி தனக்கு குவைத்தில் கொடுக்கப்பட்ட வரவேற்பின் வீடியோவை எக்ஸில் பதிவிட்டுள்ளாலர். குவைத் மக்களுக்கும் மோடி நன்றி சொல்லியிருக்கிறார். "குவைத்தில் சிறப்பான வரவேற்பு கொடுத்ததற்கு மிக்க மகிழ்ச்சி. 43 ஆண்டுகளில் ஒரு இந்தியப் பிரதமர் இப்போதுதான் குவைத் வந்திருக்கிறார். இந்தப் பயணம் இந்தியா-குவைத் நட்பை இன்னும் பலப்படுத்தும்" என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…

பிரதமர் மோடியின் குவைத் பயணம் இருநாடுகளுக்கு இடையில் பல ஆண்டுகளாக நீடித்துவரும் உறவை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக எண்ணெய் வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தம் பற்றி முக்கிய முடிவு எடுக்கப்படலாம். இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் வழங்கும் முக்கியமான நாடுகளில் ஒன்றாக குவைத் உள்ளது குறிப்பிடத்தக்கது.