ஜி20 மாநாடு.. உலக தலைவர்களை வரவேற்ற பிரதமர் மோடி - பின்னால் இருக்கும் இடம் என்னவென்று தெரிகிறதா? முழு விவரம்!
இன்று டெல்லியில் நடைபெறும் ஜி20 மாநாட்டிற்காக பல நாட்டு தலைவர்கள் இந்தியா வந்துள்ளனர். அவர்கள் அனைவரையும், மாநாடு நடக்கும் இடத்திற்கு வரவேற்றார் இந்திய பிரதமர் மோடி. அவர் பல நாட்டு தலைவர்களை வரவேற்கும்போது பின்னல் ஒரு இடத்தின் படம் வைக்கப்பட்டிருந்தது. அது என்ன இடம் தெரியுமா?
அது தான் நாளந்தா மகாவிஹாரா.. சுமார் 5ஆம் நூற்றாண்டுக்கும் 12 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் செயல்பட்ட ஒரு இடம். அதன் மரபு, புத்தர் மற்றும் மகாவீரரின் காலத்திற்கு செல்கிறது என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மை. இது அறிவையும் ஞானத்தையும் பரப்புவதில் பண்டைய இந்தியாவின் முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது.
டெல்லியில் நடைபெறும் ஜி20 மாநாடு.. இதுவரை என்ன நடந்தது? - முக்கிய அம்சங்கள் குறித்த ஒரு பார்வை!
மேலும் ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகளான பன்முகத்தன்மை, தகுதி, சிந்தனை சுதந்திரம், கூட்டு நிர்வாகம், சுயாட்சி மற்றும் அறிவைப் பகிர்வது என்று அனைத்தும் அது பிரதிபலிக்கிறது.
உலகின் ஆரம்பகால சர்வதேசப் பல்கலைக் கழகங்களில் ஒன்றாகப் புகழ் பெற்ற நாளந்தா, இந்தியாவின் மேம்பட்ட கல்வித் தொடரின் நீடித்த மனப்பான்மை மற்றும் இந்தியாவின் G20 பிரசிடென்சி தீம், வசுதைவ குடும்பகம் ஆகியவற்றைக் கொண்டு, உலக சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான அதன் அர்ப்பணிப்பிற்கு வாழும் சான்றாகும்.