2024 மக்களவை தேர்தல் : பிரதமர் மோடியா? ராகுல் காந்தியா? மக்களின் ஆதரவு யாருக்கு? சர்வே முடிவுகள் இதோ..

ABP மற்றும் CVoter ஆகியவை மாநில மக்களை அணுகி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அல்லது பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரில் யாரை பிரதமராக தேர்ந்தெடுப்பார்கள் என்பதை தெரிந்து கொள்ள கருத்துக்கணிப்பு நடத்தியது..

PM Modi or Rahul gandhi who is preferred PM Face ahead of 2024 loksabha elections apb c voters opinion poll reveals Rya

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களுக்கு பிறகு, அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் மீதான எதிர்ப்பார்ப்பு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  2024 பொது தேர்தலுக்கு முன்னோட்டம் என்று அழைக்கப்படும் 5 மாநிலத் தேர்தலில் 3 மாநிலங்களில் மாபெரும் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைத்துள்ளது. மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைத்த பாஜக, சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை கைபற்றி உள்ளது. 

பொதுத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, மோடி அலையின் மூலம் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது.. மறுபுறம், எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி தங்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை சித்தரிக்கத் தவறிவிட்டது. புது தில்லியில் நடந்த 4-வது கூட்டத்திற்கு மேற்கு வங்க முதலமைச்சரும் டிஎம்சி தலைவருமான மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை தங்கள் கூட்டணியின் பிரதமராக பரிந்துரைத்ததாக அறிவித்தார். ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலும் மம்தாவின் கருத்தை ஆதரித்தார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதற்கிடையில், ABP மற்றும் CVoter ஆகியவை மாநில மக்களை அணுகி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அல்லது பிரதமர் நரேந்திர மோடி யாரை பிரதமராக தேர்ந்தெடுப்பார்கள் என்பதை தெரிந்து கொள்ள கருத்துக்கணிப்பு நடத்தியது..

கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில், 59 சதவீதம் பேர் பிரதமர் மோடிக்கு வாக்களித்துள்ளனர், 32 சதவீதம் பேர் ராகுல் காந்திக்கு வாக்களித்துள்ளனர், அவர்களில் 4 சதவீதம் பேர் இருவருக்குமே வாக்களிக்க மாட்டோம் என்று கூறியுள்ளனர். 5% பேர் கருத்து கூற விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளனர். அதன்படி கருத்துக்கணிப்பு நடத்தப்பட்ட 10 மாநிலங்களில் பிரதமர் மோடி மற்றும் ராகுல்காந்தி இருவரில் மக்களின் ஆதரவு யாருக்கு என்பதை தற்போது பார்க்கலாம்.

10 மாநிலங்களின் கருத்துக்கணிப்பு முடிவுகள்

மாநிலம் பிரதமர் மோடி ராகுல் இருவரும் இல்லை தெரியாது
சத்தீஸ்கர் 67% 29% 1% 3%
கர்நாடகா 55% 26% 2% 7%
மத்திய பிரதேசம் 66% 28% 3% 3%
ராஜஸ்தான் 65% 32% 2% 1%
தெலங்கானா 50% 40% 2% 8%
பீகார்  66% 26% 6% 2%
மகாராஷ்டிரா 55% 30% 6% 9%
பஞ்சாப்  35% 36% 14% 15%
மேற்கு வங்கம் 60% 35% 2% 3%
உத்தர பிரதேசம் 30% 30% 8% 2%

 

இந்தி பேசும் மக்கள் குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை கருத்து.. இண்டியா கூட்டணி தலைவர்கள் கண்டனம்..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios