பிரதமர் மோடி ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், பீகாருக்கு 2 நாட்கள் பயணம்!
ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், பீகார் ஆகிய மாநிலங்களுக்கு இரண்டு நாட்கள் பயணமாக பிரதமர் மோடி செல்கிறார்
பிரதமர் மோடி, மார்ச் 1, 2 ஆகிய தேதிகளில் (இன்றும், நாளையும்) ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் பீகாருக்கு பயணம் மேற்கொள்கிறார். மார்ச் 1 ஆம் தேதி காலை 11 மணியளவில் ஜார்க்கண்ட் மாநிலம் சிந்த்ரிக்கு செல்லும் பிரதமர், அங்கு நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அங்கு ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ.35,700 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டுகிறார்.
பிற்பகல் 3 மணியளவில், பிரதமர் மோடி ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்கிறார், அங்கு அவர் மேற்கு வங்கத்தின் ஹூக்ளியில் உள்ள அரம்பாக் பகுதியில் ரூ.7,200 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைப்பதுடன், நாட்டுக்கு அர்ப்பணித்து திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மார்ச் 2 ஆம் தேதி, காலை 10:30 மணியளவில், பிரதமர் மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாநகருக்கு செல்கிறார், அங்கு அவர் ரூ.15,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டுகிறார்.
பிற்பகல் 2:30 மணிக்கு, பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் ரூ.21,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார், நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டுகிறார். மாலை 5:15 மணிக்கு, பிரதமர் பீகார் மாநிலம் பெகுசராய்க்கு பிரதமர் மோடி செல்கிறார். அங்கு அவர் ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்று, நாடு முழுவதும் சுமார் 1.48 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பல எண்ணெய் மற்றும் எரிவாயு துறை திட்டங்களையும், பீகாரில் ரூ.13,400-க்கும் அதிகமான மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.
ஜார்க்கண்ட் மாநிலம் சிந்த்ரியில் பிரதமர் மோடி
தன்பாத்தில் உள்ள சிந்த்ரியில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில், உரம், ரயில்வே, மின்சாரம் மற்றும் நிலக்கரித் துறை தொடர்பான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி, நாட்டுக்கு அர்ப்பணித்து, தொடங்கி வைக்கிறார்.
இந்துஸ்தான் உர்வாரக் & ரசாயன லிமிடெட் (HURL) சிந்த்ரி உரத் தொழிற்சாலையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். ரூ. 8900 கோடிக்கும் அதிகமான செலவில் உருவாக்கப்பட்ட இந்த உர ஆலை யூரியா துறையில் தன்னிறைவை நோக்கிய ஒரு முன்னெடுப்பாகும். இது நாட்டின் விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் நாட்டில் ஆண்டுக்கு சுமார் 12.7 லட்சம் மெட்ரிக் டன் உள்நாட்டு யூரியா உற்பத்தியை அதிகரிக்கும். முறையே டிசம்பர் 2021 மற்றும் நவம்பர் 2022-ல் பிரதமரால் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்ட கோரக்பூர் மற்றும் ராமகுண்டத்தில் உள்ள உர ஆலைகளின் புத்துயிர் பெற்ற பின்னர், நாட்டில் புதுப்பிக்கப்படும் மூன்றாவது உர ஆலை இதுவாகும்.
மக்களவை தேர்தல் 2024: ‘எனது முதல் ஓட்டு நாட்டுக்காக’ - தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு பிரசாரம்!
ஜார்க்கண்டில் ரூ. 17,600 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு ரயில் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டுகிறார். திட்டங்களில் சோனே நகர்-ஆண்டலை இணைக்கும் 3 வது மற்றும் 4 வது பாதை; டோரி- ஷிவ்பூர் முதல் மற்றும் இரண்டாவது மற்றும் பிராடோலி-ஷிவ்பூர் மூன்றாவது ரயில் பாதை (டோரி-ஷிவ்பூர் திட்டத்தின் ஒரு பகுதி); மோகன்பூர் - ஹன்ஸ்திஹா புதிய ரயில் பாதை; தன்பாத்-சந்திரபுரா ரயில் பாதை உள்ளிட்டவைகளும் அடங்கும். இந்தத் திட்டங்கள் மாநிலத்தில் ரயில் சேவைகளை விரிவுபடுத்தி, இப்பகுதியில் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இந்த நிகழ்ச்சியின் போது தியோகர் - திப்ருகர் ரயில் சேவை, டாடாநகர் மற்றும் பதம்பஹர் (தினசரி) இடையே மெமு ரயில் சேவை ஆகிய மூன்று ரயில்களையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். ஷிவ்பூர் நிலையத்திலிருந்து நீண்ட தூர சரக்கு ரயில் சேவையையும் தொடங்கி வைக்கிறார்.
சத்ராவில் வடக்கு கரண்புரா சூப்பர் அனல் மின் திட்டத்தின் முதல் அலகு (660 மெகாவாட்) உட்பட ஜார்க்கண்டில் உள்ள முக்கியமான மின் திட்டங்களையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். ரூ. 7500 கோடிக்கும் அதிகமான செலவில் உருவாக்கப்பட்ட இந்த திட்டம், இப்பகுதியில் மேம்பட்ட மின்சார விநியோகத்திற்கு வழிவகுக்கும். இது வேலைவாய்ப்பை ஊக்குவிப்பதுடன், மாநிலத்தின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்கும். ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரித் துறை தொடர்பான திட்டங்களையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.
மேற்கு வங்கத்தின் ஆரம்பாக்கில் பிரதமர் மோடி
ஹூக்ளியில் உள்ள ஆரம்பாக்கில் ரயில்வே, துறைமுகங்கள், எண்ணெய் குழாய்கள், சமையல் எரிவாயு விநியோகம் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு போன்ற துறைகள் தொடர்பான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.
சுமார் ரூ. 2,790 கோடி செலவிலான இந்தியன் ஆயிலின் 518 கிலோமீட்டர் ஹால்டியா-பரோனி கச்சா எண்ணெய் குழாய் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்த குழாய் பீகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் வழியாக செல்கிறது. பரவுனி சுத்திகரிப்பு ஆலை, போங்கைகான் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குவஹாத்தி சுத்திகரிப்பு ஆலைக்கு பாதுகாப்பான, செலவு குறைந்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் கச்சா எண்ணெயை இந்த குழாய் இணைப்பு வழங்கும்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.4 சதவீதம் வளர்ச்சி: பிரதமர் மோடி மகிழ்ச்சி!
கொல்கத்தாவில் உள்ள சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் ரூ.1000 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டுகிறார். பெர்த் எண் 8 என்.எஸ்.டி.யின் மறுகட்டுமானம் மற்றும் கொல்கத்தா கப்பல்துறை அமைப்பின் பெர்த் எண் 7 & 8 என்.எஸ்.டி.யை இயந்திரமயமாக்குதல் ஆகிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் உள்ள ஹால்டியா கப்பல்துறை வளாகத்தில் உள்ள எண்ணெய் படகுத்துறைகளில் தீயணைப்பு முறையை மேம்படுத்தும் திட்டத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். புதிதாக நிறுவப்பட்ட தீயணைப்பு வசதி அதிநவீன வாயு மற்றும் சுடர் சென்சார்கள் பொருத்தப்பட்ட ஒரு அதிநவீன முழு தானியங்கி அமைப்பாகும். இது உடனடி ஆபத்தைக் கண்டறிதலை உறுதி செய்கிறது. 40 டன் திறன் கொண்ட ஹால்டியா கப்பல்துறை வளாகத்தின் மூன்றாவது ரயில் பொருத்தப்பட்ட படகு வசதியை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். கொல்கத்தாவில் உள்ள சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் இந்த புதிய திட்டங்கள் விரைவான மற்றும் பாதுகாப்பான சரக்கு கையாளுதல் துறைமுகத்தின் உற்பத்தித்திறனை கணிசமாக அதிகரிக்கும்.
சுமார் ரூ. 2680 கோடி மதிப்பிலான ஜார்கிராம் – சல்கஜரி (90 கிலோமீட்டர்) இணைக்கும் மூன்றாவது ரயில் பாதை; சோண்டாலியா – சம்பாபுகூர் ரயில் பாதையை இரட்டை ரயில்பாதையாக மாற்றுதல் (24 கிலோமீட்டர்); மற்றும் டன்குனி – பட்டாநகர் – பால்டிகுரி ரயில் பாதையை (9 கி.மீ.) இரட்டிப்பாக்குதல் ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்தத் திட்டங்கள் இப்பகுதியில் ரயில் போக்குவரத்து வசதிகளை விரிவுபடுத்தி, நகர்வை மேம்படுத்தி, சரக்குப் போக்குவரத்தின் தடையற்ற சேவையை எளிதாக்கி, இந்தப் பிராந்தியத்தின் பொருளாதார மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
கரக்பூரில் உள்ள வித்யாசாகர் தொழிற் பூங்காவில் ஆண்டுக்கு 120 டிஎம்பிஏ திறன் கொண்ட இந்தியன் ஆயிலின் சமையல் எரிவாயு பாட்டிலிங் ஆலையையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். ரூ. 200 கோடிக்கும் அதிகமான செலவில் உருவாக்கப்பட்ட எல்பிஜி எரிவாயு நிரப்பும் ஆலை பிராந்தியத்தின் முதல் எல்பிஜி எரிவாயு நிரப்பும் ஆலையாக இருக்கும். இது மேற்கு வங்கத்தில் சுமார் 14.5 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு எரிவாயுவை வழங்கும்.
மேற்கு வங்கத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு தொடர்பான மூன்று திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார். சுமார் 600 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த திட்டங்களுக்கு உலக வங்கி நிதியுதவி அளித்துள்ளது. இந்த திட்டங்களில் ஹவுராவில் 65 எம்.எல்.டி திறன் மற்றும் 3.3 கி.மீ கழிவுநீர் கட்டமைப்புக் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் (எஸ்.டி.பி) ஆகியவை அடங்கும்; 62 மில்லியன் லிட்டர் திறன் மற்றும் 11.3 கிமீ கழிவுநீர் கட்டமைப்புக் கொண்ட பாலியில் பணிகள், கமர்ஹட்டி & பராநகரில் 60 மில்லியன் லிட்டர் திறன் மற்றும் 8.15 கிமீ கழிவுநீர் கட்டமைப்புக் கொண்ட பணிகளும் அடங்கும்.
மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணா நகரில் பிரதமர்
கிருஷ்ணா நகரில், மின்சாரம், ரயில், சாலை போன்ற துறைகள் தொடர்பான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
நாட்டின் மின் துறையை வலுப்படுத்தும் வகையில், புருலியா மாவட்டம் ரகுநாத்பூரில் அமைந்துள்ள ரகுநாத்பூர் அனல் மின் நிலையத்தின் இரண்டாம் கட்டத்திற்கு (2x660 மெகாவாட்) பிரதமர் அடிக்கல் நாட்டுவார். தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷனின் இந்த நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் திட்டம் மிகவும் திறமையான சூப்பர் கிரிட்டிகல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இந்த புதிய ஆலை நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் ஒரு முன்னெடுப்பாக இருக்கும்.
மெஜியா அனல் மின் நிலையத்தின் 7 மற்றும் 8-வது அலகில் ஃப்ளூ கேஸ் டிசல்பிரைசேஷன் (FGD) அமைப்பை பிரதமர் தொடங்கி வைப்பார். சுமார் 650 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட எஃப்ஜிடி அமைப்பு ஃப்ளூ வாயுக்களில் இருந்து சல்பர் டை ஆக்சைடை அகற்றி, சுத்தமான ஃப்ளூ வாயுவை உற்பத்தி செய்து ஜிப்சம் உருவாக்கும், இது சிமென்ட் தொழிலில் பயன்படுத்தப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலை எண் 12-ல் ஃபராக்கா – ராய்கன்ஜ் பிரிவை (100 கிலோமீட்டர்) நான்கு வழிப்பாதையாக மாற்றும் சாலைத் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைப்பார். சுமார் ரூ.1986 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த திட்டம், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும், இணைப்பை மேம்படுத்தும் மற்றும் வடக்கு வங்காளம் மற்றும் வடகிழக்கு பிராந்தியத்தின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும்.
தாமோதர் – மொஹிஷிலா ரயில் பாதையை இரட்டிப்பாக்கும் திட்டம் உட்பட மேற்கு வங்கத்தில் ரூ. 940 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள நான்கு ரயில் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார்; ராம்பூர்ஹாட் மற்றும் முராராய் இடையே மூன்றாவது பாதை; பஜார்சாவ் – அசிம்கஞ்ச் ரயில் பாதையை இரட்டிப்பாக்குதல்; மற்றும் அசிம்கஞ்ச் - முர்ஷிதாபாத்தை இணைக்கும் புதிய பாதைத் திட்டங்கள் ரயில் இணைப்பை மேம்படுத்தி, சரக்குப் போக்குவரத்தை எளிதாக்கி, இந்தப் பிராந்தியத்தில் பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சிக்கு பங்களிக்கும்.
பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் பிரதமர் மோடி
அவுரங்காபாத்தில், பிரதமர் ரூ. 21,400 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கிறார், நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டுகிறார்.
மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பை வலுப்படுத்தும் பிரதமர், ரூ.18,100 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார். 63.4 கிலோமீட்டர் நீளமுள்ள நடைபாதை கூடிய இருவழிப்பாதை, தேசிய நெடுஞ்சாலை எண் 227-ல் ஜெய்நகர்-நராஹியா பிரிவு; என்.எச் -131 ஜி இல் கன்ஹௌலி முதல் ராம்நகர் வரையிலான ஆறு வழி பாட்னா ரிங் சாலையின் பிரிவு; கிஷன்கஞ்ச் நகரில் தற்போதுள்ள மேம்பாலத்திற்கு இணையாக 3.2 கி.மீ நீளமுள்ள இரண்டாவது மேம்பாலம்; 47 கிலோமீட்டர் நீளமுள்ள பக்தியார்பூர்-ரஜௌலியை நான்கு வழிப்பாதையாக்குதல்; தேசிய நெடுஞ்சாலை 319-ல் 55 கிலோ மீட்டர் நீளமுள்ள அர்ரா – பராரியா பிரிவை நான்கு வழிப்பாதையாக மாற்றுதல் ஆகிய திட்டங்களும் அடங்கும்.
பிரதமர் மோடியை சந்தித்த பில்கேட்ஸ்.. செயற்கை நுண்ணறிவு, காலநிலை மாற்றம் குறித்து விவாதம்..
அமாஸ் முதல் ஷிவ்ராம்பூர் கிராமம் வரையிலான 55 கிலோமீட்டர் நீளமுள்ள நான்கு வழி அணுகல் கட்டுப்பாட்டு கிரீன்ஃபீல்ட் தேசிய நெடுஞ்சாலை கட்டுமானம் உட்பட ஆறு தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார்; சிவராம்பூர் முதல் ராம்நகர் வரையிலான 54 கி.மீ நீளமுள்ள நான்கு வழி கிரீன்ஃபீல்ட் தேசிய நெடுஞ்சாலை; கல்யாண்பூர் கிராமத்திலிருந்து பால்பதர்பூர் கிராமம் வரை 47 கி.மீ நீளமுள்ள நான்கு வழி அணுகல் கட்டுப்படுத்தப்பட்ட கிரீன்ஃபீல்ட் தேசிய நெடுஞ்சாலை; பால்பதர்பூர் முதல் பெலா நவாடா வரை 42 கி.மீ நீளமுள்ள நான்கு வழி அணுகல் கட்டுப்படுத்தப்பட்ட கிரீன்ஃபீல்ட் தேசிய நெடுஞ்சாலை; தானாபூர் - பிஹ்தா பிரிவிலிருந்து 25 கி.மீ நீளமுள்ள நான்கு வழி உயர்த்தப்பட்ட நடைபாதை; மற்றும் பிஹ்தா – கோயில்வார் பிரிவில் தற்போதுள்ள இருவழிப்பாதையிலிருந்து நான்கு வழிப்பாதையாக தரம் உயர்த்துதல். சாலைத் திட்டங்கள் இணைப்பை மேம்படுத்தி, பயண நேரத்தை குறைத்து, சுற்றுலாவை ஊக்குவித்து, இப்பகுதியின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
பாட்னா வட்டச் சாலையின் ஒரு பகுதியாக கங்கை ஆற்றின் குறுக்கே கட்டப்படும் ஆறு வழி பாலத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இந்த பாலம் நாட்டின் மிக நீளமான ஆற்றுப் பாலங்களில் ஒன்றாக இருக்கும். இந்தத் திட்டம் பாட்னா நகரம் வழியாக போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதுடன், பீகாரின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்கு இடையே விரைவான மற்றும் சிறந்த இணைப்பை வழங்கி, ஒட்டுமொத்த பிராந்தியத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சியையும் மேம்படுத்தும்.
பீகாரில் நமாமி கங்கை திட்டத்தின் கீழ் சுமார் ரூ.2,190 கோடி செலவில் உருவாக்கப்பட்ட பன்னிரண்டு திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். சைத்பூர் மற்றும் பஹாரியில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை; சைத்பூர், பியூர், பஹாரி மண்டலத்தின் கழிவுநீர் கட்டமைப்பு; கர்மாலிசாக்கில் கழிவுநீர் கட்டமைப்புடன் கூடிய கழிவுநீர் அமைப்பு; பஹாரி மண்டலம் 5-ல் கழிவுநீர் அகற்றும் திட்டம்; மற்றும் பர்ஹ், சாப்ரா, நௌகாச்சியா, சுல்தான்கஞ்ச் மற்றும் சோன்பூர் நகரில் இடைமறிப்பு, திசைதிருப்பல் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகள் ஆகியவையும் பிரதமர் தொடங்கிவைக்கப்பட உள்ளன. இந்தத் திட்டங்கள் பல இடங்களில் கங்கை நதியில் விடப்படுவதற்கு முன்பு கழிவுநீர் சுத்திகரிப்பை உறுதி செய்கின்றன, இது ஆற்றின் தூய்மையை மேம்படுத்துகிறது மற்றும் பிராந்திய மக்களுக்கு பயனளிக்கிறது.
பாட்னாவில் யூனிட்டி மாலுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். ரூ .200 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்படவுள்ள இந்த திட்டம், சர்வதேச வடிவமைப்பு நடைமுறைகள், தொழில்நுட்பம், வசதி மற்றும் அழகியல் ஆகியவற்றை உள்ளடக்கிய அதிநவீன வசதியாக கருதப்படுகிறது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இந்த மால் பிரத்யேக இடங்களை வழங்கும். இந்த மாலில் தனித்துவமான தயாரிப்புகள் மற்றும் கைவினைத்திறனை காட்சிப்படுத்தப்பட உள்ளன. மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு 36 பெரிய அரங்குகளும், பீகாரின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 38 சிறிய அரங்குகளும் அமைக்கப்படும். யூனிட்டி மால் உள்ளூர் உற்பத்தி மற்றும் ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்புகள், புவிசார் குறியீடு பெற்ற (ஜிஐ) தயாரிப்புகள் மற்றும் பீகார் மற்றும் இந்தியாவின் கைவினைப் பொருட்களை ஊக்குவிக்கும். வேலைவாய்ப்பு உருவாக்கம், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மாநிலத்தின் ஏற்றுமதி ஆகியவற்றின் அடிப்படையில் இந்த திட்டம் குறிப்பிடத்தக்க சமூக-பொருளாதார பயனை அளிக்கும்.
பாடலிபுத்ரா முதல் பஹ்லேசா வரையிலான ரயில் பாதையை இரட்டிப்பாக்கும் திட்டம் உட்பட பீகாரில் மூன்று ரயில்வே திட்டங்களையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார்; பந்துவா – பைமார் இடையே 26 கிலோமீட்டர் நீளமுள்ள புதிய ரயில் பாதை; மற்றும் கயாவில் ஒரு மெமு கொட்டகை. அரா பை பாஸ் ரயில் பாதைக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இந்த ரயில் திட்டங்கள் சிறந்த ரயில் இணைப்புக்கு வழிவகுக்கும், ரயில்களின் திறன் மற்றும் இயக்கத்தை மேம்படுத்தும் மற்றும் இப்பகுதியில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
பீகார் மாநிலம் பெகுசாராயில் பிரதமர் மோடி
சுமார் 1.48 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களுக்கு பிரதமர் மோடி தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டுவதால், பெகுசராயில் நடைபெறும் பொது நிகழ்ச்சி நாட்டின் எரிசக்தித் துறைக்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கும். பீகார், ஹரியானா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா போன்ற பல்வேறு மாநிலங்களில் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கேஜி படுகையில் இருந்து 'முதல் எண்ணெயை' நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பிரதமர், ஓ.என்.ஜி.சி கிருஷ்ணா கோதாவரி ஆழ்நீர் திட்டத்தின் முதல் கச்சா எண்ணெய் டேங்கரை கொடியசைத்து தொடங்கி வைப்பார். கேஜி படுகையில் இருந்து 'முதல் எண்ணெய்' பிரித்தெடுத்தல் இந்தியாவின் எரிசக்தித் துறையில் ஒரு வரலாற்று சாதனையைக் குறிக்கிறது. எரிசக்தி இறக்குமதியை நாம் சார்ந்திருப்பதை கணிசமாகக் குறைக்கும் என்று உறுதியளிக்கிறது. இந்த திட்டம் இந்தியாவின் எரிசக்தி துறையில் ஒரு புதிய சகாப்தத்தை அறிவிக்கிறது, எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் பொருளாதார பின்னடைவை வளர்ப்பதற்கும் உறுதியளிக்கிறது.
பீகாரில் ரூ.14,000 கோடி மதிப்பிலான எண்ணெய் மற்றும் எரிவாயு துறை திட்டங்கள் மேற்கொள்ளப்படும். ரூ.11,400 கோடிக்கும் அதிகமான திட்ட செலவில் பரவுனி சுத்திகரிப்பு ஆலையின் விரிவாக்கத்திற்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் பரவுனி சுத்திகரிப்பு நிலையத்தில் கிரிட் உள்கட்டமைப்பு போன்ற திட்டங்களைத் தொடங்குதல் ஆகியவை இதில் அடங்கும்; பாரதீப் – ஹால்டியா – துர்காபூர் சமையல் எரிவாயு குழாய் இணைப்பு பாட்னா மற்றும் முசாபர்பூர் வரை நீட்டிக்கப்படும் திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
ஹரியானாவில் உள்ள பானிபட் சுத்திகரிப்பு ஆலை மற்றும் பெட்ரோ கெமிக்கல் வளாகத்தின் விரிவாக்கம்; பானிபட் சுத்திகரிப்பு ஆலையில் 3ஜி எத்தனால் ஆலை மற்றும் வினையூக்கி ஆலை; ஆந்திராவில் விசாக் சுத்திகரிப்பு நவீனமயமாக்கல் திட்டம்; பஞ்சாபின் பாசில்கா, கங்காநகர் மற்றும் ஹனுமன்கர் மாவட்டங்களை உள்ளடக்கிய நகர எரிவாயு விநியோக நெட்வொர்க் திட்டம்; கர்நாடக மாநிலம் குல்பர்காவில் புதிய பி.ஓ.எல் பணிமனை, மகாராஷ்டிராவில் மும்பை ஹை வடக்கு மறு வளர்ச்சி 4 –வது கட்டம், ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திய பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி நிறுவனத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
பரோனியில் இந்துஸ்தான் உர்வாரக் & ரசாயன லிமிடெட் உரத் தொழிற்சாலையையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். ரூ.9500 கோடிக்கும் அதிகமான செலவில் உருவாக்கப்பட்ட இந்த ஆலை விவசாயிகளுக்கு மலிவு விலை யூரியாவை வழங்குவதோடு அவர்களின் உற்பத்தித்திறன் மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை அதிகரிக்க வழிவகுக்கும். நாட்டில் புத்துயிர் பெறும் நான்காவது உரத் தொழிற்சாலை இதுவாகும்.
சுமார் ரூ.3917 கோடி மதிப்பிலான பல்வேறு ரயில்வே திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார். ரகோபூர் - ஃபோர்ப்ஸ்கஞ்ச் கேஜ் மாற்றத்திற்கான திட்டம் இதில் அடங்கும்; முகுரியா-கதிஹார்-குமேத்பூர் ரயில் பாதையை இரட்டிப்பாக்குதல்; பரானி-பச்வாரா 3-வது மற்றும் 4-வது வழித்தடத்திற்கான திட்டம், கதிஹார்-ஜோக்பானி ரயில் பிரிவை மின்மயமாக்குதல் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
இத்திட்டங்கள் பயணத்தை எளிதாக அணுகக்கூடியதாக மாற்றுவதுடன், இப்பகுதியின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். தனப்பூர் – ஜோக்பானி எக்ஸ்பிரஸ் (தர்பங்கா – சக்ரி வழி) ஜோக்பானி - சஹர்சா எக்ஸ்பிரஸ்; சோன்பூர்-வைஷாலி எக்ஸ்பிரஸ்; மற்றும் ஜோக்பானி-சிலிகுரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட நான்கு ரயில்களையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைப்பார்.
நாட்டில் உள்ள கால்நடை விலங்குகளுக்கான பாரத் பசுதான்' டிஜிட்டல் தரவுத்தளத்தை '– பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். தேசிய டிஜிட்டல் கால்நடை இயக்கத்தின் கீழ் உருவாக்கப்பட்ட 'பாரத் பசுதான்' ஒவ்வொரு கால்நடை விலங்கிற்கும் ஒதுக்கப்பட்ட தனித்துவமான 12 இலக்க குறியீட்டைப் பயன்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ், மதிப்பிடப்பட்ட 30.5 கோடி மாட்டினகளில், சுமார் 29.6 கோடி மாட்டினகள் ஏற்கனவே குறியிடப்பட்டு அவற்றின் விவரங்கள் தரவுத்தளத்தில் உள்ளன. 'பாரத் பசுதான்' மாடுகளுக்கான கண்டுபிடிப்பு முறையை வழங்குவதன் மூலம் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும், மேலும் நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டிலும் உதவும்.
'பாரத் பசுதான்' தரவுத்தளத்தின் கீழ் உள்ள அனைத்து தரவுகளையும் தகவல்களையும் பதிவு செய்யும் '1962 விவசாயிகள் செயலி' என்ற செயலியையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.