புத்தாக்கம் செய்யப்பட்டுள்ள டிடி தமிழ் சேனலை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!
புத்தாக்கம் செய்யப்பட்டுள்ள டிடி தமிழ் சேனலை சென்னையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
டிடி பொதிகை தொலைக்காட்சி டிடி தமிழ் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு ரூ 40 கோடி செலவில் புத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த தொலைக்காட்சியின் தொழில்நுட்பங்கள், உபகரணங்கள் மற்றும் ஸ்டுடியோக்கள் மேம்படுத்தப்பட்டு, அதில் ஒளிபரப்பாகும் செய்திகள் மற்றும் நிகழ்ச்சிகள் நவீன முறையில் மேம்பட்ட தரத்தில் வழங்கப்படவுள்ளன.
இந்த நிலையில், புத்தாக்கம் செய்யப்பட்டுள்ள டிடி தமிழ் சேனலை சென்னையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் ஜனவரி 19ஆம் தேதி (இன்று) முதல் வருகிற 31ஆம் தேதி வரை சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெறுகிறது.
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். அப்போது, ரூ.40 கோடி செலவில் புத்தாக்கம் செய்யப்பட்டுள்ள டிடி தமிழ் சேனலை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
விளையாட்டுத்துறையில் முக்கிய மாநிலமாக உயர்ந்திருக்கும் தமிழ்நாடு: உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
புத்தம்புதிய நிகழ்ச்சிகள், தொடர்கள், ஒளியும் ஒலியும், திரைப்படங்கள், சினிமா நிகழ்ச்சிகள், நடப்பு நிகழ்வுகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சிகள், நடுநிலையான செய்திகளை வழங்கும் தூர்தர்ஷனுக்கு மக்களிடம் என்றுமே தனியிடம் உண்டு. அதற்கேற்றாற் போல் டிடி தமிழ் சேனல் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் நிகழ்ச்சிகள் எச்.டி தரத்தில் ஒளிபரப்பாகவுள்ளது. ஒவ்வொரு மணி நேரமும் செய்திகள் ஒளிபரப்பாகவுள்ளது.