ஜார்க்கண்ட் மாநிலம் தியோகரில் எய்ம்ஸ், விமான நிலையம் உட்பட சுமார் 16,800 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினார்.

ஜார்க்கண்ட் மாநிலம் தியோகரில் எய்ம்ஸ், விமான நிலையம் உட்பட சுமார் 16,800 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினார். முன்னதாக ஜார்க்கண்ட் மாநிலம் வந்தடைந்த பிரதமர் மோடியை அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் உட்பட பலர் உற்சாக வரவேற்றனர். பின்னர் 401 கோடி செலவில் 657 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள விமான நிலையத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இதையும் படிங்க: சூப்பர்மூன் 13-ம்தேதி இரவு வானில் தோன்றும்: பெயர் என்ன? இந்தியாவில் தெரியுமா?

Scroll to load tweet…

ராஞ்சிக்குப் பிறகு ஜார்கண்டின் இரண்டாவது விமான நிலையத்தின் திறப்பு விழாவைக் குறிக்கும் வகையில், தியோகர் விமான நிலையத்திலிருந்து கொல்கத்தா செல்லும் இண்டிகோ விமானத்தை அவர் கொடியசைத்து துவக்கி வைத்தார். அதை தொடர்ந்து தியோகர், எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவு மற்றும் ஆபரேஷன் தியேட்டர் சேவைகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் பல சாலைகள், எரிசக்தி மற்றும் பிற உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 

Scroll to load tweet…

பின்னர் தியோகரில் உள்ள பாபா பைத்யநாத் கோவில், பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில் பைத்யநாத் தாம் என்று அழைக்கப்படும் இக்கோயில் விளக்குகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. கோவிலின் வாசலுக்கு பிரதமர் மோடி சென்றவுடன், கோவிலில் சந்தியா ஆரத்தி செய்யும் 11 பூசாரிகள் கொண்ட குழு அவருக்கு மலர்களால் வரவேற்பு அளித்தது. அதன் பின்னர் அவர் பூஜைக்காக கோவிலுக்கு உள்ளே அழைத்துச் செல்லப்பட்டார்.

இதையும் படிங்க: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் தேசிய சின்னம்… தனித்துவமாக காட்சியளிக்க என்ன காரணம்?

கோவிலின் கருவறையில், பூசாரிகளின் வேத மந்திரங்கள் ஓதுவதற்கு மத்தியில் பிரதமர் மோடி பிரார்த்தனை செய்தார். பாபாதாமில் பிரார்த்தனை செய்த பிறகு தியோகர் பரேட் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது சில அரசியல் கட்சிகள் குறுக்கு வழி அரசியலை மேற்கொள்ள வேண்டாம். தற்போது குறுக்கு வழி அரசியல் சவாலாக இருக்கிறது. இதுபோன்ற அரசியலை தவிர்க்க வேண்டும். ஷார்ட் கட் அரசியலும் ஒரு நாள் ஷார்ட் சர்க்யூட்டையே கொண்டு வரும். எனவே இதுபோன்ற அரசியல் கட்சிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.