பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது டெர்மினலை நவம்பர் 11ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்த விமான நிலையம் ரூ. 5000 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

இந்த புதிய டெர்மினல் திறப்பைத் தொடர்ந்து, பயணிகள் கையாளும் திறன், செக்-இன் மற்றும் குடியேற்றத்திற்கான கவுன்டர்கள் ஆகியவை இரட்டிப்பாகும். இவை மக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். தற்போது கெம்பேகவுடா விமான நிலையத்தில் ஆண்டுக்கு 2.5 கோடி பயணிகள் கையாளப்படுகின்றனர். இரண்டாவது டெர்மினல் திறந்த பின்னர் ஆண்டுக்கு 5 முதல் 6 கோடி பயணிகளை கையாள முடியும்.

பெங்களூர் நகருக்கு அன்பளிப்பாக இந்த டெர்மினல் 2 வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையம் முழுவதும் தோட்டம் போன்ற வடிவமைப்பை கொண்டு இருக்கிறது. பொதுவாக பெங்களூரு நகரம் தோட்ட நகரம் என்று அழைக்கப்படுகிறது. அதற்கேற்ப, விமான நிலையமும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

டெல்லி சென்ற தமிழிசை சௌந்தரராஜன்… மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச்சு!!

பயணிகள் டெர்மினல் 2க்குள் செல்லும்போது தோட்டத்தில் நடப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. 10,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட விமான நிலையத்தின் உள்கட்டமைப்பு பசுமை சுவர்கள், தொங்கும் தோட்டங்கள் மற்றும் வெளிப்புற தோட்டங்கள் என வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தோட்டங்கள் உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளன. இந்த விமான நிலையத்தின் வளாகம் முழுவதும் 100% புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

G-20 Summit 2022: ஜி-20 மாநாடு: உலகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி பரிசாக வழங்க உள்ள பொருட்கள் என்ன?