டெல்லி சென்ற தமிழிசை சௌந்தரராஜன்… மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச்சு!!

டெல்லியில் தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தனது மூன்று ஆண்டுகால செயல்பாடுகள் குறித்த புத்தகத்தை வழங்கியுள்ளார். 

tamilisai met central home affairs minister amit sha at delhi

டெல்லியில் தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தனது மூன்று ஆண்டுகால செயல்பாடுகள் குறித்த புத்தகத்தை வழங்கியுள்ளார். தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் டெல்லி சென்றிருந்த நிலையில் அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.

இதையும் படிங்க: 10% இட ஒதுக்கீடு.! உயர்ஜாதி ஏழைகளுக்கு இடஒதுக்கீடு தேவையா ? சர்ச்சைகளுக்கு காரணம் என்ன ?

சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில், தனது மூன்று ஆண்டுகால செயல்பாடுகள் குறித்த புத்தகத்தை அமித்ஷாவிடம் வழங்கினார். மேலும் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் தொடர்பான மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார். இந்த சந்திப்பு குறித்து பேசிய தமிழிசை, இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஏழை விவசாயிகளுக்கு 5 கோடி மதிப்பில் நிலங்களை வழங்கிய சீக்கிய சகோதரர்கள் - குவியும் பாராட்டு !!

இந்த சந்திப்பு குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழிசை சௌந்தரராஜன், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை புதுதில்லியில் சந்தித்து தெலுங்கானாவில் எனது மூன்றாம் ஆண்டு செயல்பாடுகள் குறித்த புத்தகத்தினை வழங்கினேன். மேலும்,தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் தொடர்பான மக்கள் நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்தேன் என்று குறிப்பிட்டுள்ளார். இவர்களின் சந்திப்பு புதுச்சேரி மற்றும் தெலுங்கானா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios