பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மக்களை ரூ.50,000 மற்றும் தேவையான மருந்துகளை கையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்கியதாக வெளியான செய்தியில் எந்த உண்மையும் இல்லை இப்போது உண்மை சர்பார்ப்பு மூலமாக தெரியவந்துள்ளது
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் போர் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் மத்திய அரசு சார்பில் ஒரு ஆலோசனை படம் வெளியிடப்பட்டதாக கூறி சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது. அதில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மக்களை தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், அத்தியாவசிய பொருட்களை வீட்டிலேயே வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது.
அதோடு, 2 மாதங்களுக்கு தேவையான ரூ.50,000 பணம் மற்றும் மருந்துகள் ஆகியவற்றை கையில் வைத்துக்கொள்ளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது. மேலும், பதட்டமான சூழலுக்கு மத்தியில் மக்கள் அனைவரும் எச்சரிக்கையாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டும் என்றும் அந்த ஆலோசனை குழுவில் கேட்டு கொள்ளப்பட்டிருந்தது. ஆனால், இது தொடர்பாக PIB நடத்திய உண்மை சரிபார்ப்பில் இது போன்று ஆலோசனையில் கூறப்பட்டிருக்கும் செய்தியானது பொய்யானது என்று தெரியவந்துள்ளது.


