pm narendra modi: ஹரியாணா பானிபட்டில் ரூ.900 கோடி 2ஜி எத்தனால் ஆலை: பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
ஹரியாணாவில் ரூ.900 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள 2வது தலைமுறைக்கான எத்தனால் தயாரிப்பு ஆலையை நாட்டுக்கு பிரதமர் மோடி இன்று அர்ப்பணித்தார்.
ஹரியாணாவில் ரூ.900 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள 2வது தலைமுறைக்கான எத்தனால் தயாரிப்பு ஆலையை நாட்டுக்கு பிரதமர் மோடி இன்று அர்ப்பணித்தார்.
பானிபட் நகரில் இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் 900 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எத்தனால் ஆலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையை பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் திறந்து வைத்தார். காணொளி மூலம் நடந்தஇந்த நிகழ்ச்சியில ஹரியாணா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா, மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்
சூப்பரூ! அம்மாவும் பையனுமா! ஒரே நேரத்தில் தேர்வு எழுதி அரசுப் பணிக்குத் தேர்ச்சி
பானிப்பட்டில் அமைந்துள்ள எத்தனால் ஆலையில் , ஆண்டிற்கு சுமார் 2 லட்சம் டன் வைக்கோலைப் பயன்படுத்தி 3 கோடி லிட்டர் எத்தனாலை உற்பத்தி செய்ய முடியும். இந்த ஆலையில் தினமும் 100 கிலோ லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்யப்படும் என்பதால் 1 லட்சம் விவசாயிகள் நேரடியாகப் பயன்பெறுவார்கள்.
இந்தியாவில் வேளாண் கழிவுகளை செல்வமாக மாற்றும் இந்த திட்டம் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் எனத் தெரிகிறது. இதன் மூலம் விவசாயிகள் தங்கள் நிலங்களில் வீணாகும் வைக்கோலை எரிக்காமல், அதை இந்த ஆலையில் கொடுத்து எத்தனாலுக்கு மாற்றலாம். விவசாயிகளுக்கும் போதுமான அளவு வருமானம் கிடைக்கும்.
இந்த தொழிலால் விவசாயிகள் நேரடியாகப் பயன்பெறுவதோடு, மறைமுகமாக ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆண்டுதோறும் பனிக்காலத்தில் விவசாயிகள் வைக்கோலை எரிப்பதால் தலைநகர் டெல்லிவரை பரவும் புகை இனிவரும் மாதங்களில் குறையும், காற்றுமாசு படிப்படியாகக்குறையும்
நிதிஷ் குமார் ‘ஈயம் பூசப்பட்ட’ ஆளுமை: பிரசாந்த் கிஷோர் கிண்டல்
இந்த நிகழ்ச்சியி் பிரதமர் மோடி பேசியதாவது:
நம்முடைய தேசத்தில் இயற்கையை வழிபடும் கலாச்சாரம் இருக்கிறது. ஆதலால், பானிபட்டில் உருவாக்கப்பட்டுள்ள பயோஎரிபொருள் ஆலையில் இனிவரும் காலங்களில் இயற்கை பாதுகாக்கப்படும். இதை நமது விவசாயிகள் சிறப்பாக புரிந்து கொள்வார்கள். பயோ-எரிபொருளை நாம் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.
பயோ-எரிபொருள் ஆலையை பயன்பாட்டுக்கு வந்தபின், வயல்களில் அறுவடைக்குப் பின் வரும் வைக்கோல்களை கொண்டுவர ஏற்பாடு செய்யப்படும். இதன் மூலம் வேலைவாய்ப்பு உருவாகும், புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கிராமங்கள், விவசாயிகள் அனைவரும் இதனால் பயன்பெறுவார்கள். நாட்டிற்கு சவாலாக இருக்கும் சுற்றுச்சூழல், காற்று மாசு ஆகியவை குறைக்கப்படும்.
‘யு டர்ன் ராஜா’ நிதிஷ் குமார், மோடியைச் சமாளிப்பாரா? 2024- தேர்தலில் பிரதமர் வேட்பாளரா?
தங்கள் அரசியல் சுயநலமாக இருந்தால், யார் வேண்டுமானாலும் பெட்ரோல், டீசல் இலவசம் என்று அறிவிக்கலாம். இதுபோன்ற நடவடிக்கைகள், நமது குழந்தைகளின் உரிமையை பறிக்கும், நாடு சுதேசி நிலைக்கு வருவதையும் தடுக்கும். வரி செலுத்துவோருக்கு பெருமை சுமையை உருாவாக்கும்.
கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் நமது நாட்டில் எத்தனால் உற்பத்தி 40 கோடிலிட்டராகஇருந்தது. இன்று 400 கோடி லிட்டராக அதிகரித்துள்ளது.
ஆனால், இவர்கள் எவ்வளவு மாய தந்திரங்கள், மந்திரங்கள் செய்தாலும், மூட நம்பிக்கைகள் மீது வைத்திருந்தாலும், மக்கள் அவர்களை நம்பமாட்டார்கள். சிலர் கறுப்பு ஆடை அணிந்து கொண்டு கடந்த 5ம் தேதி சூனியத்தையும், எதிரமறையான சிந்தனைகளையும் பிரச்சாரம் செய்வதை பார்த்தோம். மூடநம்பிக்கைகளையும், மாயதந்திரங்களையும் பிரச்சாரம் செய்யும் முயற்சியும் நடந்தது. கறுப்பு ஆடை அணிவதால் மட்டும் தங்களுடைய விரக்தியை தீர்த்துக்கொள்ள முடியும் என அவர்கள் நம்புகிறார்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்
கடந்த 5ம்தேதி காங்கிரஸ் கட்சியினர் விலைவாசி உயர்வு, பணவீக்கம், ஜிஎஸ்டி வரி ஆகியவற்றுக்கு எதிராக நாடாளுமன்றத்துக்கு கறுப்பு ஆடை அணிந்து வந்திருந்தார்கள் அதைக் குறிப்பிட்டு பிரதமர் மோடி மறைமுகமாகச் சாடினார்.