Prashant Kishor: nitish: bihar: நிதிஷ் குமார் ‘ஈயம் பூசப்பட்ட’ ஆளுமை: பிரசாந்த் கிஷோர் கிண்டல்
நிதிஷ் குமார் மூலம் பூசப்பட்ட ஆளுமை என்று தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.
நிதிஷ் குமார் மூலம் பூசப்பட்ட ஆளுமை என்று தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் பாஜகவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி நடத்திய ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதிஷ் குமார், 2 ஆண்டுகள் முடிவில் திடீரென கூட்டணியிலிருந்து விலகினார்.
முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்த நிதிஷ் குமார், காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணியுடன் சேர்ந்து புதிய ஆட்சி அமைக்க உள்ளார். இன்று பிற்பகல் காங்கிரஸ் ஆர்ஜேடி, நிதிஷ் குமார் கூட்டணியில் புதிய அரச பீகாரில் பொறுப்பேற்கிறது.
வெட்கமா இருக்கு! தேசியக் கொடியை வாங்காவிட்டால் ரேஷன் பொருட்கள் குறைப்பு: வருண் காந்தி கொந்தளிப்பு
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் துணைத் தலைவரும் தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோரிடம், நிதிஷ் குமார் நடவடிக்கை குறித்து என்டிடிவி சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்தாவது:
கடந்த 5 ஆண்டுகளுக்குமுன் இருந்ததைப் போல் நிதிஷ் குமார் இன்னும் மக்கள் மத்தியில் பிரபலமாகத்தான் இருக்கிறாரா?
சில கடினமான உண்மைகளை நாம் நம்பித்தான் ஆக வேண்டும். 2010ல் ஜேடியு கட்சிக்கு 117 எம்எல்ஏக்கள் இருந்தார்கள், 2015ல் 72 ஆகக்குறைந்தது, 2020ல் 43 ஆகக் சரிந்தது. பல அரசியல் வல்லுநர்கள் நிதிஷ் குமாரைப் பற்றி கூறுகையில் அவர் முலாம்பூசப்பட்ட ஆளுமை என்கிறார்கள். அவரைப் பொறுத்தவரை தேர்தல் வெற்றிக் கணக்குகள் பொருட்டல்ல.
‘யு டர்ன் ராஜா’ நிதிஷ் குமார், மோடியைச் சமாளிப்பாரா? 2024- தேர்தலில் பிரதமர் வேட்பாளரா?
மகாகட்பந்தன் 2.0 அடுத்து பீகாரில் எவ்வாறு ஆட்சி நடத்தும், அது 2024ம் ஆண்டுதேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா
கூட்டணி வலுவாக அமைந்து மக்கள் எதிர்பார்க்கும் வகையில் ஆட்சிஅமைந்தால் நிச்சயமாக தடுக்கமுடியாத சக்தியாக மாறுவார்கள். சிறப்பாக நிர்வாகம் செய்யாவிட்டால், 2024ம் ஆண்டு தேர்தல் பெரிய பின்னடைவாக இருக்கும். மகா கூட்டணி 2015ம் ஆண்டில் இருந்ததை விட தற்போதுள்ள மகாகூட்டணி 2.0 முற்றிலும் வேறுபட்டது.
2015ம் ஆண்டில் மக்கள் தீர்ப்பளித்தனர் ஆட்சி அமைக்க முடிந்தது. இந்த ஆட்சி அப்படி அல்ல. இந்த கூட்டணிக்கு பீகாரைக் கடந்து, கடந்த கால அனுபவங்களை வைத்து செயல்பட வேண்டியுள்ளது. இதை நான் சந்தர்ப்பவாத கூட்டணி என்று சொல்லமாட்டேன், எண்களின் கணக்கீடுதான். 7 கட்சிகள் சேர்ந்து ஆட்சிஅமைத்துள்ளது, பெரிதாக தீர்மானம் ஏதும் இல்லை.
பிரதமர் பதவிக்கு நிதிஷ் குமார் பொருத்தமானவரா
பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் என்று ஒருபோதும் நிதிஷ் குமார் கூறியதாக நான் கேட்கவில்லை.எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து, இதுதான் வழி, இப்படித்தான் செல்ல வேண்டும் என்று கூறியதாகவும் நான் கேட்கவில்லை. ஏராளமான ஊகச்செய்தி வருகிறது. செய்திகள் தாக்கம் தணியட்டும். யார் பிரதமர் என்பதைமக்கள் தீர்மானிக்கட்டும். நிதிஷ் குமார் வேட்பாளராக இருந்தால்கூட அனைத்துக் கட்சிகளும் ஏற்க வேண்டும்.
பாஜக கூட்டணியைவிட்டு ஏன் நிதிஷ் வெளியேறினார்
பாஜகவுடனான கூட்டணி அரசில் நிதிஷ் குமாருக்கு அசவுகரியக் குறைவு ஏற்பட்டிருக்கலாம். அதனால்தான் அவர் வேறு கூட்டணிக்கு மாறுகிறார். குறுகிய காலத்தில் இது தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது. 2017 முதல் 2022 வரை பாஜக கூட்டணயில்தான் நிதிஷ் இருந்தார். அவர் பாஜகவுடன் நெருக்கமாக, வசதியாக இருந்தார் என்று நான் ஒருபோதும் காணவில்லை. அதற்கு பல காரணங்கள் உள்ளன. மகா கூட்டணியை மீண்டும் பரிசோதித்து பார்க்கலாம் என்று கூட்டணி மாறியுள்ளார்.
இவ்வாறு பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்