nitish kumar: ‘யு டர்ன் ராஜா’ நிதிஷ் குமார், மோடியைச் சமாளிப்பாரா? 2024- தேர்தலில் பிரதமர் வேட்பாளரா?
யு-டர்ன்(U-trun king) ராஜா என்று அழைக்கப்படும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார், 2024ம் ஆண்டு மக்களவைத்தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுவாரா என்ற பேச்சு எழுந்துள்ளது.
யு-டர்ன்(U-trun king) ராஜா என்று அழைக்கப்படும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார், 2024ம் ஆண்டு மக்களவைத்தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுவாரா என்ற பேச்சு எழுந்துள்ளது.
ஆனால், பிரதமர் மோடி என்று மிகப்பெரிய ஆளுமை, அரசியல் தந்திரம், திட்டமிடுதல், பேச்சுதிறன், திட்டமிடுதல் ஆகியவற்றை நிதிஷ்குமார் சமாளிப்பாரா என்பது கேள்விக்குறிதான்.
எதிர்க்கட்சிகள் தரப்பில் நிதிஷ் குமார் ஒருவேளை பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும் கடந்த காலங்களில் அவரின் யு-டர்ன் செயல்பாடுகள் எதிர்க்கட்சிகளின் வயிற்றில் உருண்டை ஓடும் உணர்வையே கொடுக்கும்.
நிதிஷ் உடன் உறவு முறிவு: பாஜவுக்கு பின்னடைவா? NDAவிலிருந்து 3வது பெரிய கட்சியும் விலகல்
ஏனென்றால், நிதிஷ் குமார் என்றாலே நிலையற்றவர், பச்சோந்தி, யுடர்ன் கிங் என்றெல்லாம் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார். கூட்டணிக் கட்சியான ஆர்ஜேடியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூட பச்சோந்தி என்று நிதிஷ் குமாரை விமர்சித்துள்ளார்.
ஒரு கூட்டணியிலிருந்து மற்றொரு கூட்டணிக்கு திடீரென மாறுவதை சளைக்காமல் செய்யக்கூடியவர் நிதிஷ்குமார். கடந்த 9 ஆண்டுகளில் பாஜக கூட்டணியிலிருந்து 2முறையும், காங்கிரஸ் கூட்டணியிலிருந்து இருமுறையும் விலகியுள்ளார் .
இது தவிர எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக, நிதிஷ் குமார் தவிர்த்து, மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோரும் இருக்கிறார்கள்.
ஆனால் பிரதமர் வேட்பாளராக நிறுத்த நிதிஷ் குமாருக்கு அனைத்து திறமையும் உள்ள என்று ஜேடியு கட்சி தெரிவிக்கிறது.
ஜேடியு கட்சியின் தலைவர் உபேந்திர குஷ்வாலா கூறுகையில் “ நாட்டில் ஆளுமை உள்ளவர்களை ஆய்வு செய்தால், பிரதமராக வருவதற்கு நிதிஷ்குமார்தான் தகுதியானவர். இப்போது நாங்கள் ஏதும் கூறவில்லை. பிரதமராகவருவதற்கு அனைத்து தகுதியும் அவருக்கு உண்டு” எனத் தெரிவித்தார்
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் சரத் யாதவும், “ பிரதமர் வேட்பாளராக நிதிஷ் குமார் நியமிக்கப்பட அனைத்து தகுதிகளும் அவருக்கு உண்டு “எ னத் தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில், நேற்று ஆளுநரைச்சந்தித்து ராஜினா கடிதத்தை நிதிஷ் குமார் அளித்தார். அதன்பின் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, பிரதமர் வேட்பாளராக வரப்போகிறீர்களா என்று கேட்டபோது அதற்கு நிதஷ் குமார் பதில் அளிக்கவில்லை.
2005ம் ஆண்டு பீகார் முதல்வராக நிதிஷ் குமார் வந்தபோது, அப்போது ஆட்சியில் இருந்த லாலுபிரசாத்தை காட்டுராஜா என்று விமர்சித்தார். 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார். இதனால் அதிருப்தி அடைந்த நிதிஷ் குமார் 2013ம் ஆண்டு என்டிஏவிலிருந்து வெளியேறினார்.
நிதிஷ் குமாருக்கு துரோகம் செய்வது கைவந்த கலை: பாஜக விளாசல்; மாநிலம் முழுவதும் இன்று போராட்டம்
அதன்பின் காங்கிரஸ், ஆர்ஜேடியுடன் கூட்டணி வைத்து 2015ம் ஆண்டு மீண்டும் பீகார் முதல்வராகினார் நிதிஷ் குமார். 2017ம் ஆண்டு மகா கூட்டணியை விட்டு நிதிஷ் வெளியேறி, மீண்டும் பாஜகவில் இணைந்தார். இப்போது மீண்டும் பாஜகவிலிருந்து வெளியேறி, ஆர்ஜேடி, காங்கிரஸில் இணைந்துள்ளார்.
நிதிஷ் குமார் குறித்து சிவேசனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி கூறுகையில் “ நிதிஷ் குமாரின் அரசியல் வாழ்க்கை நிலையில்லாதது. ஊழல் குற்றச்சாட்டு வேறு இருக்கிறது. ஏராளமான முறை கொள்கைகளை மறந்து பலகூட்டணிக்கு நிதிஷ் மாறியுள்ளார்.
நிதிஷ்குமார் எப்போது மனது மாறுவார் என்பது கூட்டணியில் இருப்பவர்ககளுக்கே தெரியாது. இதுதான் இவருக்கு எதிராக இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர்களிடையே ஒற்றுமை இல்லாத நிலையில் எவ்வாறு நிதிஷ் குமார் பிரதமர் வேட்பாளராக வருவார்”எனத் தெரிவித்துள்ளார்.
பீகாரில் பாஜக கூட்டணியிலிருந்து நிதிஷ் குமார் வெளியேறியுள்ளதை இடதுசாரிகள், திரிணமூல் காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளன. ஆனால், நிதிஷ் குமார் பிரதமர் வேட்பாளராக என்ற கேள்விக்கு பதில் அளிக்க அந்தகட்சிகளின் நிர்வாகிகள் மறுத்துவிட்டார்கள்.
பீகாரில் சிறப்பாக செயல்படும் கட்சி பாஜக… விவரம் இதோ!!
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மஜ்ஜித் மேமம் கூறுகையில் “ எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக வருவதற்கு சரத் பவார், மம்தா பானர்ஜி மட்டுமே தகுதி உண்டு. இதில் நிதிஷ் குமாரும் இருக்கிறார், திறமைசாலி. ஆனால், எதிர்க்கட்சிகளின் ஒருமித்த முடிவுதான் யார் வேட்பாளர் என்பதை முடிவு செய்யும். அடிக்கடி அரசியல் நிலைப்பாட்டை மாற்றக்கூடியவர் நிதிஷ் குமார். இவரின் நிலையற்ற தன்மையை மக்கள் ஏற்பார்களா” எனத் தெரிவித்தார்
நிதிஷ் குமாரின் நெருங்கிய நண்பரும், ஜேடியுவிலிருந்து விலகியவருமான ஆர்சிபி சிங் கூறுகையில் “ 7 முறை பிறந்தாலும்கூட பீகார் முதல்வர் ஒருபோதும் பிரதமராக வர முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
பாஜக எம்.பி. விவேக் தாக்கூர் கூறுகையில் “ நிதிஷ் குமாரின் இலக்கிற்கு எல்லையே இல்லை. பீகாருக்கும் அவரால் பணியாற்ற முடியவில்லை, கட்சிக்கும் பணியாற்ற முடியவில்லை.
பீகார்: நிதிஷ் குமாருக்கு ஜித்தன் மாஞ்சி ஆதரவு: பாஜகவுக்கு எதிராக கட்சிகள் ஒன்று சேரும்-அகிலேஷ்
அதற்குள் அடுத்த இலக்கிற்கு சென்றுவிட்டார். பிரதமர் பதவி இப்போது காலியில்லை. தேசத்துக்கு நல்ல ஜனாதிபதியும், துணை ஜனாதிபதியும் கிடைத்துவிட்டார்கள். நிதிஷ் குமார் கூட்டணி மாறியதைவைத்து வெப் சீரிஸை எடுத்துவிடலாம்” எனத் தெரிவி்த்தார்.
நிதிஷ் குமாரின் அரசியல் நிலையற்ற தன்மை, அடிக்கடி நிலைப்பாட்டை மாற்றி, கொள்கை பிடிப்பின்றி கூட்டணி மாறுவது எதிர்க்கட்சிகள் மத்தியில் ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களாக முன்வைக்கப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் பிரதமர் மோடியை எதிர்த்து பிரதமர் வேட்பாளராக நிதிஷ் குமார் எவ்வாறு நிறுத்தப்பட சாத்தியம் இருக்கும்?