மக்களவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் நிதியாக பிரதமர் மோடி ரூ.2000 நன்கொடை அளித்துள்ளார்

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. அந்த வகையில், க்ரவுட் ஃபண்டிங் எனப்படும் பொது நிதி திரட்டும் பிரசாரமான தேசத்திற்கு நன்கொடை எனும் திட்டத்தை காங்கிரஸ் கட்சி அண்மையில் அறிவித்து நன்கொடை பெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, 'தேசத்தை கட்டியெழுப்ப நன்கொடை' (Donation For Nation Building) என்ற நன்கொடை பிரசாரத்தை பாஜக தொடங்கியுள்ளது. இந்தியாவை வளர்ச்சியடைந்த பாரதமாக மாற்றுவதற்கான பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டங்களுக்கு தனிப்பட்ட முறையில் பங்களிப்பை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. நமோ செயலி மூலம் நன்கொடை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் பிரதமராக இரண்டாவது முறையாக ஷெபாஸ் ஷெரீப் தேர்வு!

“இந்தியாவை வளர்சியடைந்த பாரதமாக மாற்றுவதற்கான பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டங்களுக்கு நாம் அனைவரும் முன்வந்து நமோ செயலியைப் பயன்படுத்தி இந்த #DonationForNationBuilding வெகுஜன இயக்கத்தில் இணைவோம்.” என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அழைப்பு விடுத்துள்ளார்.

Scroll to load tweet…

இந்த நிலையில், தேசத்தை கட்டியெழுப்ப நன்கொடை திட்டத்தின் கீழ், மக்களவைத் தேர்தலுக்கான பாஜக நிதியாக பிரதமர் மோடி ரூ.2000 நன்கொடை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “பாஜகவுக்கு பங்களிப்பதிலும், வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கான எங்கள் முயற்சிகளை வலுப்படுத்துவதிலும் நான் மகிழ்ச்சியடைகிறேன். நமோ செயலி மூலம் தேசத்தை கட்டியெழுப்புவதற்கான நன்கொடையின் பங்களிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.