'இணைந்து செயல்படுவோம்!' மீண்டும் ரஷ்ய அதிபரான புடினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
விளாடிமிர் புடினுக்கு வாழ்த்து கூறி பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, வரும் ஆண்டுகளில் இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான கூட்டுறவை வலுப்படுத்துவதை எதிர்நோக்குவதாகத் தெரிவித்துள்ளார்.
ஐந்தாவது முறையாக ரஷ்ய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விளாடிமிர் புடினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்த ரஷ்ய அதிபர் தேர்தலில் வென்றதின் மூலம் அடுத்த 6 ஆண்டுகளுக்கு புடின் அதிபர் பதவியில் தொடர இருக்கிறார்.
விளாடிமிர் புடினுக்கு வாழ்த்து கூறி ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "ரஷ்ய கூட்டமைப்பின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட விளாடிமிர் புடினுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். வரும் ஆண்டுகளில் இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான சிறப்பான மூலோபாய கூட்டுறவை மேலும் வலுப்படுத்த இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்குகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
சோவியத் காலத்தில் இருந்தே எதிர்க்கட்சிகள் மீதும் மற்றும் பேச்சுரிமைக்கு எதிராகவும் கடுமையான ஒடுக்குமுறையைத் தொடர்ந்து வந்த நிலையில், மிகவும் பெரும்பான்மையான ஆதரவுடன் புடின் மீண்டும் ரஷ்யாவின் அதிபர் பதவியைத் தக்க வைத்துள்ளார்.
குட்டிப் பேரனுக்கு ரூ. 240 கோடி பங்குகளை பரிசாக வழங்கிய இன்போசிஸ் நாராயண மூர்த்தி
திங்களன்று அதிபர் தேர்தலில் வெற்றியை உறுதி செய்த பின்பு முதல் முறையாக பேசிய விளாடிமிர் புடின், மேற்குலக நாடுகளுக்கு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளார். ரஷ்யாவிற்கும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவக் கூட்டமைப்புக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டால், மூன்றாம் உலகப் போர் ஏற்படக்கூடும் என்றும் ஆனால் அத்தகைய சூழ்நிலையை யாரும் விரும்பவில்லை என்றும் புடின் தெரிவித்துள்ளார்.
1962 கியூபா ஏவுகணை நெருக்கடிக்குப் பிறகு உக்ரைனுக்கு எதிரான போர் காரணமாக மேற்குலக நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான உறவுகளில் மோசமான பாதிப்பைத் தூண்டியுள்ளது. இச்சூழலில் அணு ஆயுதப் போரின் அபாயங்கள் குறித்தும் புடின் அடிக்கடி எச்சரித்துள்ளார். ஆனால் உக்ரைனில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கடந்த மாதம் உக்ரைனில் தரைப்படைகளை எதிர்காலத்தில் நிலைநிறுத்துவதை நிராகரிக்க முடியாது என்று கூறினார். பல மேற்கத்திய நாடுகள் உக்ரைனில் இருந்து தங்களை படைகளை விலக்கிக் கொள்ளும் நிலையில், கிழக்கு ஐரோப்பா உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கிறது.
மூச்சுக்காற்று மூலம் ஸ்மார்ட்போன் அன்லாக் செய்யலாம்! அசத்தும் சென்னை ஐஐடி குழுவினர்!