இந்தியாவிற்கான யோசனை: காங்கிரஸை வறுத்தெடுத்த பிரதமர் மோடி!
இந்தியாவிற்கான யோசனை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பிரதமர் மோடி நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, இந்தியாவிற்கான யோசனை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியையும், ராகுல் காந்தியையும் பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்
இந்தியாவை வெளிநாட்டு லென்ஸ் மூலம் பார்க்கும் காங்கிரஸுக்கு இந்தியாவின் யோசனை பற்றி எதுவும் தெரியாது என பிரதமர் மோடி சாடினார். “ராமர் வழிபாடு இந்தியாவின் கருத்துக்கு எதிரானது என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், காங்கிரஸ் ஒரு இனவாதக் கட்சி. காங்கிரஸின் இளவரசரின் வழிகாட்டி இந்தியர்களை சீனர்கள் மற்றும் ஆப்பிரிக்கர்கள் என்று அழைக்கிறார். காங்கிரசுக்கு பிரித்து ஆட்சி செய்ய மட்டுமே தெரியும்.” என இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடாவின் கருத்துக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்தார்.
சைபர் குற்றங்களில் ஈடுபட்டதாக 28,000 செல்போன்களை முடக்கி மத்திய அரசு அதிரடி!
இந்தியாவின் யோசனை என்றால் என்ன என்று கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி, இந்தியாவின் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான கலாச்சாரத்தின் பிரதிபலிப்பதே இந்தியாவின் யோசனை என்றார். இந்தியாவின் யோசனை என்றால் சத்யமேவ் ஜெயதே; இந்தியாவின் கருத்து அகிம்சையே உயர்ந்த மதம் என்பதாகும் என அவர் கூறினார்.
இந்தியாவின் யோசனை என்றால் வசுதைவ குடும்பகம்; அனைத்து மதங்களின் சமத்துவம்; புத்தம் சரணம் கச்சாமி; பொது சேவை என்பது கடவுளுக்கான சேவை என பிரதமர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “இந்தியா என்ற இந்த எண்ணம் இன்று வெறும் நம்பிக்கையுடன் மட்டும் நின்றுவிடவில்லை இந்தியா என்ற எண்ணமே இன்று உலகின் குரலாக உள்ளது. அதாவது சர்வதேச யோகா தினம் என்பது இந்தியாவின் யோசனை; ஒரே பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம் என்பது இந்தியாவின் யோசனை.” என்றார்.
யாரிடமிருந்து இந்தியாவின் யோசனை என்ற உத்வேகத்தைப் பெறுகிறோமோ, அந்த ராமரை வழிபடுவது இந்தியாவின் எண்ணத்திற்கு எதிரானது என்று காங்கிரஸ் கூறுகிறது என பிரதமர் மோடி சாடினார்.