போலீஸ் அதிகாரியால் சுடப்பட்ட ஒடிசா அமைச்சர் நபா கிஷோர் தாஸ் சிகிச்சைப் பலனின்றி மரணம் அடைந்தார்.

காவல் துறை உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதில் படுகாயமடைந்த ஒடிசா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ், மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அமைச்சர் நபா கிஷோர் தாஸ், ஜார்சுகுடா மாவட்டம், பிரஜாராஜ் நகர் பகுதியில் நடைபெற இருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார். அவர் காரை விட்டு இறங்கியபோது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த உதவி காவல் ஆய்வளர் கோபால் தாஸ் என்பவர் அமைச்சரின் மார்பை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டார்.

இதையும் படிங்க..DMK: நல்ல பீஸா அனுப்பு.. பெண் புரோக்கரிடம் ஆபாசமாக பேசிய திமுக நிர்வாகி - வைரல் ஆடியோ கிளப்பிய சர்ச்சை

அவர் துப்பாக்கியால் சுட்டதை அடுத்து, அமைச்சர் நபா கிஷோர் தாஸ் சரிந்து கீழே விழுந்தார். இந்தச் சம்பவத்தின்போது உள்ளூர் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட இருவர் மீதும் கோபால் தாஸ் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளார். இதையடுத்து காயம்பட்ட மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்திய கோபால் தாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Scroll to load tweet…

இந்த நிலையில் நபா கிஷோர் தாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து பல்வேறு முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் நபா கிஷோர் தாஸ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஒடிசா அமைச்சர் நபா தாஸின் மறைவு வருத்தமளிக்கிறது. அமைச்சர் நபா தாஸின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க..உத்திரமேரூர் கல்வெட்டு உலகமே வியக்கிறது.. மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம் !!

Scroll to load tweet…

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும் வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஒடிசா முதலமைச்சருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க..பிபிசி ஆவணப்படம்.. அதானி! நீட்! இலங்கை - திமுக எம்பிக்களுக்கு அறிவுரை செய்த முதல்வர் ஸ்டாலின்!