ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு போனில் வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி!
விளாடிமிர் புடின் மார்ச் 18ஆம் தேதி ரஷ்ய கூட்டமைப்பின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இன்று போனில் தொடர்புகொண்டு பேசி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விளாடிமிர் புடினுடன் பிரதமர் மோடி புதன்கிழமை தொலைபேசியில் உரையாடினார். உரையாடலின் போது, ரஷ்யா - உக்ரைன் போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தினார்.
விளாடிமிர் புடின் மார்ச் 18ஆம் தேதி ரஷ்ய கூட்டமைப்பின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இன்று போனில் தொடர்புகொண்டு பேசி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
விளாடிமிர் புடின் ஐந்தாவது முறையாக ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் இன்னும் ஆறு ஆண்டுகள் ரஷ்ய அதிபராக நீக்க உள்ளார்.
வெட்கமே இல்லாத ஒருவரால் தான் இப்படி பேச முடியும்: பிரதமருக்கு மனோ தங்கராஜ் பதில்!
பிரதமர் மோடி மற்றும் விளாடிமிர் புடின் இருவரும் வரும் ஆண்டுகளில் இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டுறவை மேலும் வலுப்படுத்த ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள ஒப்புக்கொண்டனர்.
பல்வேறு விவகாரங்களில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்தும் பரஸ்பர ஈடுபாடு கொண்ட பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
விளாடிமிர் புடினுக்கு வாழ்த்து கூறி ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, "ரஷ்ய கூட்டமைப்பின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட விளாடிமிர் புடினுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். வரும் ஆண்டுகளில் இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான சிறப்பான மூலோபாய கூட்டுறவை மேலும் வலுப்படுத்த இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்குகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
இப்பவே கண்ணைக் கட்டுதா? கோடையில் வெயிலில் இளைப்பாற பட்ஜெட் விலையில் சூப்பர் ஏசி!