பள்ளிகளில் மதிய உணவு உட்கொள்ளும் மாணவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு கேரள முதலமைச்சர் பிரனாயி விஜயன் கடும் கண்டனம்  தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இலவச மதிய உணவு திட்டத்தின் மூலம் சுமார் 10 கோடி மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்தநிலையில், மதிய உணவு உண்ணும் மாணவர்கள் தங்களது ஆதார் எண்ணை பள்ளியில் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் இந்த முடிவு அபத்தமாகவும், விசித்திரமாகவும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசின் நடவடிக்கை குழந்தைகள் மதிய உணவு உட்கொள்வதில் தடைகளை ஏற்படுத்தும் என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.