harthal:kerala news today:கேரளாவில் பிஎப்ஐ சார்பில் இன்று ஹர்தால்:பஸ்கள் மீது கல்வீச்சு: போஸீலார் எச்சரிக்கை
கேரளாவில் இன்று பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் விடுக்கப்பட்ட கடையடைப்பு போராட்டத்தில் பல்வேறு இடங்களில் பஸ்கள் மீது கற்கள் வீசப்பட்டன. இதனால் அரசுப் பேருந்து சேவை, தனியார் பேருந்து சேவை பல மாவட்டங்களில் ரத்து செய்யப்பட்டது. தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.
கேரளாவில் இன்று பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் விடுக்கப்பட்ட கடையடைப்பு போராட்டத்தில் பல்வேறு இடங்களில் பஸ்கள் மீது கற்கள் வீசப்பட்டன. இதனால் அரசுப் பேருந்து சேவை, தனியார் பேருந்து சேவை பல மாவட்டங்களில் ரத்து செய்யப்பட்டது. தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.
பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு அலுவலகங்களிலும், நிர்வாகிகள் வீடுகளிலும் தேசிய புலனாய்வு முகமை நேற்று சோதனை நடத்தியது, அதன் நிர்வாகிகள் பலரை கைது செய்தது. இதற்கு எதிராக கேரளா முழுவதிலும் பிஎப்ஐ அமைப்பு சார்பில் இன்று ஹர்தால் அதாவது கடையடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதச் செயல்களுக்கு நிதியுதவி அளித்தல், தீவிரவாதச் செயல்களுக்கான பயிற்சி அளிக்க முகாம் அமைத்தல், தீவிரவாத அமைப்புகளில் சேர்வதற்கு ஆட்களை மூளைச் சலவை செய்தல் ஆகியவற்றை பிஎப்ஐ அமைப்பும், அதன் நிர்வாகிகளும், எஸ்டிபிஐ கட்சியும் செய்துவருவதாக என்ஐஏ அமைப்புக்கு புகார்கள் வந்தன.
முஸ்லிம் தலைவர் இமாம் உமர் அகமது இல்யாசியுடன் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு… காரணம் இதுதான்!!
இதையடுத்து, என்ஐஏ அமைப்பும், அமலாக்கப்பிரிவும் இணைந்து 11 மாநிலங்களில் அதிரடியாக ரெய்டு நடத்தின. இந்த ரெய்டில் இதுவரை 106 பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.
கேரளாவில் பிஎப்ஐ அமைப்பின் தேசிய, மாநில, மாவட்ட அளவிலான முக்கியத் தலைவர்களை என்ஐஏ அமைப்பினர் கைதுசெய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பிஎப்ஐ மாநிலத் தலைவர் சிபி முகமது பசீர், தேசியத் தலைவர் ஓஎம்ஏ சலாம்,தேசிய செயலாளர் நஸ்ருதீன் இளமாறம் ஆகியோர் என்ஐஏ பாதுகாப்பில் உள்ளனர்.
இந்நிலையில் என்ஐஏ நடத்திய சோதனையைக் கண்டித்தும், எதிர்ப்புக் குரல்களை மத்திய அரசு அரசு விசாணை அமைப்புகள் மூலம் அடக்க முயல்வதைக் கண்டித்தும் பிஎப்ஐ அமைப்பு சார்பில் இன்று கேரளாவில் ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. இதன்படி காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை ஹர்தால் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது.
சிரஞ்சீவி யோஜனா திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு ஸ்மார்ட் போன்... அறிவித்தது ராஜஸ்தான் அரசு!!
ஆனால், சட்டத்தை கையில் எடுப்பவர்கள், மக்களின் போக்குவரத்துக்கு இடையூறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் எச்சரிக்கை விடுத்திருந்தனர். சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட போதுமான போலீஸார் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவிக்கபட்டது.
கேரளாவில் வழக்கம் போல் அரசு பேருந்துகள் இயங்கும் தேவையான பாதுகாப்பு வழங்கப்படும். மருத்துவமனை, விமானநிலையம், ரயில்வேநிலையங்கள், பேருந்து நிலையங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், கேரளாவில் காலை ஹர்தால் தொடங்கியதிலிருந்து பல்வேறு இடங்களில் அரசு பேருந்துகள் மீது கற்கள் வீசி தாக்கப்பட்டு கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் கேரள அரசு பேருந்து மீது கற்கள் வீசிப்பட்டன.
என்ஐஏ ரெய்டு: பிஎப்ஐ அமைப்புக்கு தடை வருமா?: அமித் ஷா முக்கிய ஆலோசனை
கோழிக்கோடு நகரில் பேருந்து மீது கற்கள் வீசப்பட்டதில், பேருந்து ஓட்டுநர் காயமடைந்தார். இதையடுத்து, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். திருவனந்தபுரத்தில் கட்டக்கடாவில் பேருந்துகளை போராட்டக்கார்ரகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோழிக்கோடு மாவட்டத்தில் அரசு பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. கொச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் தனியார் பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டது.கேரள பல்கலைக்கழகம், எம்ஜி பல்கலைக்கழகம், கண்ணூர் பல்கலைக்கழகத்தில் இன்று நடக்க இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன. பிஎட் கவுன்சிலிங், இடஒதுக்கீட்டை வரும் 25ம் தேதிக்கு கேரள பல்கலைக்கழகம் ஒத்தி வைத்தது.