பெட்ரோல்,டீசல் விலை உயர்வு…மக்கள் தலையில் மீண்டும் கை வைத்த மத்திய அரசு..
பெட்ரோல் விலை லிட்டருக்கு 42 பைசாவும், டீசல் விலை 1 ரூபாய் 3 காசுகளும் உயர்த்தப்பட்டடுள்ளன.
பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெயின் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல்- டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதம் இருமுறை மாற்றியமைத்து வருகின்றன.
அதன்படி இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்துள்ளன. அதன்படி இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 42 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.
இதே போன்று டீசல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 3 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.
பெட்ரோல்,டீசல் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
