Asianet News TamilAsianet News Tamil

ரூ.40 க்கு பெட்ரோல்... பிளாஸ்டிக் குப்பையில் தயாரித்து அசத்தல்..!

பிளாஸ்டிக்கை வைத்து பெட்ரோல் தயாரித்து, அதனை 40 ரூபாய்க்கு விற்பனை செய்து அசத்திவருகிறார் கல்லூரி பேராசியர் சதீஷ்.

petrol for Rs 40 ... Made from plastic trash
Author
Tamil Nadu, First Published Jun 29, 2019, 3:54 PM IST

பிளாஸ்டிக்கை வைத்து பெட்ரோல் தயாரித்து, அதனை 40 ரூபாய்க்கு விற்பனை செய்து அசத்திவருகிறார் கல்லூரி பேராசியர் சதீஷ்.petrol for Rs 40 ... Made from plastic trash

ஐதராபாத்தைச் சேர்ந்த மெக்கானிக்கல் இன்ஜினியர் சதீஷ். கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்து பெட்ரோல் தயாரித்து வருகிறார். பிளாஸ்டிக் பைரோலிசிஸ் முறையை பயன்படுத்தி, பிளாஸ்டிக் பொருட்கள் மூலம் பெட்ரோல் தயாரித்துவரும் இவர், பல தொழிற்சாலைகளுக்கு அதனை 40லிருந்து 50 ரூபாய்க்கு அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்துவருகிறார்.

petrol for Rs 40 ... Made from plastic trash

இதனை வாகனங்களுக்கு பயன்படுத்த முடியுமா? என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேராசிரியர் சதீஷ், ’’சுற்றுசூழலை பாதுகாக்கவே இதுபோன்ற புதிய முயற்சி செய்துள்ளேன். லாபத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. 400 கிலோ பிளாஸ்டிக் மூலம் 400 லிட்டர் பெட்ரோல் தயாரிக்க முடியும். petrol for Rs 40 ... Made from plastic trash

அதாவது ஒரு கிலோ பிளாஸ்டிக்கில் ஒரு லிட்டர் பெட்ரோல் தயாரிக்க முடியும். பிளாஸ்டிக் பைரோலிசிஸ் முறை மூலம் பிளாஸ்டிக்கை, பெட்ரோல் மற்றும் டீசல் தயாரிக்கலாம்’’ என அவர் தெரிவித்துள்ளார். ஐதராபாத்தைச் சேர்ந்த பேராசிரியர் சதீஷின் இந்த புதிய முயற்சி, அப்பகுதி மக்களிடையே பாராட்டை பெற்றுவருகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios