Asianet News TamilAsianet News Tamil

பெட்ரோல் இன்று இரவுக்குள் போட்டுக்கங்க..!! நாளை......

petrol bunk-money-emumlr
Author
First Published Dec 2, 2016, 6:11 PM IST


இன்று இரவுடன் ரூ. 500 பெட்ரோல் பங்குகளில் ஏற்பது முடிவடைகிறது. நாளையிலிருந்து புதிய ரூபாய் தாள்கள் மூலமே போட முடியும். ஆகவே முந்துங்கள் .

நாளை முதல் பெட்ரோல் பங்க்குகளிலும் பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது

பெட்ரோல் பங்க்குகளில் வெள்ளிக்கிழமைக்குப் (டிச.2) பிறகு பழைய ரூ.500 நோட்டுகள் வாங்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேபோன்று டிசம்பர் 3-ஆம் தேதி முதல் பழைய ரூபாய் நோட்டுகளைக் கொண்டு விமான டிக்கெட் வாங்க முடியாது என்றும் சுங்கச் சாவடி கட்டணம் செலுத்த முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

petrol bunk-money-emumlr

மக்களின் வசதிக்காக பெட்ரோல் நிரப்பும் மையங்கள், சுங்கச் சாவடிகள், விமான டிக்கெட் முன்பதிவு மையங்கள் உள்ளிட்டவற்றில் பழைய ரூ.500 நோட்டுகளை வரும் 15-ஆம் தேதி வரை பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தச் சலுகையைப் பயன்படுத்தி சிலர் தங்களிடமுள்ள கருப்புப் பணத்தை மாற்றி வருவதாகத் தெரிய வந்தது.

petrol bunk-money-emumlr

இந்நிலையில், அதற்கும் கடிவாளமிடும் நடவடிக்கையில் தற்போது மத்திய அரசு இறங்கியுள்ளது. அதன்படி பழைய ரூ.500 நோட்டுகளை முழுவதுமாக புழக்கத்திலிருந்து எடுக்கும் நடவடிக்கையாக அவற்றை இனி பெட்ரோல் பங்க்குகளிலும் செலுத்த முடியாது என்று அறிவித்துள்ளது.

டிசம்பர் 3-ஆம் தேதிக்கு மேல், ரூ.100, புதிய ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகள் மட்டுமே நாட்டில் புழக்கத்தில் இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

அதனால் இன்று இரவுக்குள் உங்கள் கையில் உள்ள பழை 500 ரூபாயில் பெட்ரோல் போட்டு கொள்ளுங்கள் . நாளைமுதல் புதிய கரன்சிகள் ,அல்லது கிரெடிட் , டெபிட் கார்டு மூலமே பெட்ரோல் போட முடியும். 

Follow Us:
Download App:
  • android
  • ios