தெலங்கானாவில் பழங்குடியின ஆண் ஒருவர் ஒரே மேடையில் இரண்டு பெண்களை திருமணம் செய்துக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தெலங்கானாவில் பழங்குடியின ஆண் ஒருவர் ஒரே மேடையில் இரண்டு பெண்களை திருமணம் செய்துக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் கிராமங்களில் பல்வேறு வகையான சம்பிரதாய சடங்குகள் நடைமுறையில் உள்ள நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த சத்திபாபு என்பவர் ஒரே நேரத்தில் தோசலி பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஸ்வப்னகுமாரி என்பவரையும் தனது முறைப்பெண்ணான சுனிதா என்பவரையும் காதலித்து வந்துள்ளார்.
இதையும் படிங்க: ஓயோ நிறுவனரின் தந்தை மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு... விபத்து குறித்து போலீஸார் விசாரணை!!

அவர்களின் சம்பிரதாயப்படி திருமணம் செய்துகொள்ள உள்ள பெண்ணுடன் திருமணத்திற்கு முன்பு இணைந்து வாழ வேண்டும். அதன்படி சத்திபாபு இரண்டு பெண்களுடனும் இணைந்து வாழ்ந்துள்ளார். இதை அடுத்து ஸ்வப்னாவுக்கு மகளும், சுனிதாவுக்கு மகனும் பிறந்தனர். இதனை தொடர்ந்து, இரண்டு பெண்களின் பெற்றோர்களும் தங்கள் மகள்களை திருமணம் செய்து கொள்ளுமாறு சத்திபாபுவை கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க: முதல் முறையாக விமானத்தில் செல்லும் பிக்பாஸ் போட்டியாளர்... இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

அதன்பேரில் இரண்டு பெண்களின் குடும்பத்தாரின் சம்மதத்துடன் ஒரே மேடையில் இரண்டு பெண்களுக்கும் சத்திபாபு தாலி கட்டினார். இந்த திருமணம் சத்திபாபு குல வழக்கப்படி நடைபெற்றது. மேலும் இதில், இரண்டு பெண்களின் கிராமத்தினர் மற்றும் சத்திபாபு கிராமத்தினர் என மூன்று கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு இவர்கள் மூவரையும் வாழ்த்தி சென்றனர். ஒரே மேடையில் இரண்டு பெண்களை திருமணம் செய்துக்கொண்ட சத்திபாபுவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
