ஓயோ நிறுவனர் ரித்தேஷ் அகர்வாலின் தந்தை ரமேஷ் அகர்வால், ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ள உயரமான மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார்.
ஓயோ நிறுவனர் ரித்தேஷ் அகர்வாலின் தந்தை ரமேஷ் அகர்வால், ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ள உயரமான மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார். கட்டிடத்தின் 20 ஆவது மாடியில் இருந்து விழுந்தாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரமேஷ் அகர்வால் தனது மனைவியுடன் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. ரமேஷ் அகர்வால் உயிரிழப்பை ஓயோவின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார். மேலும் ரித்தேஷ் அகர்வாலும் தனது தந்தை இறந்துவிட்டதாக அறிக்கை வெளியிட்டார்.
இதையும் படிங்க: முதல் முறையாக விமானத்தில் செல்லும் பிக்பாஸ் போட்டியாளர்... இணையத்தில் வைரலாகும் வீடியோ!!
இதுக்குறித்த அவரது அறிக்கையில், கனந்த இதயத்துடன், எனது குடும்பமும் நானும், எங்கள் வழிகாட்டும் ஒளி மற்றும் வலிமை, என் தந்தை ஸ்ரீ ரமேஷ் அகர்வால் மார்ச் 10 அன்று காலமானார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து என்னையும் எங்களில் பலரையும் ஊக்கப்படுத்தினார். அவரது மரணம் எங்கள் குடும்பத்திற்கு மிகப்பெரிய இழப்பு. எனது தந்தையின் கருணையும் அரவணைப்பும் எங்களின் கடினமான காலங்களில் எங்களைக் முன்னேற்றியது.
இதையும் படிங்க: பிரம்மாண்டமாக நடைபெற்ற OYO நிறுவனர் ரித்தேஷ் அகர்வால் - கீதன்ஷா திருமண வரவேற்பு.. வைரல் போட்டோஸ்
அவரது வார்த்தைகள் எங்கள் இதயங்களில் ஆழமாக எதிரொலிக்கும். இந்த துயரமான நேரத்தில் எங்கள் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் தான் ஒயோ நிறுவனர் ரித்தேஷ் அகர்வாலுக்கும், கீதன்ஷாவுக்கும் டெல்லியில் திருமணம் நடைபெற்றது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சாப்ட்பேங்க் தலைவர் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். திருமணம் செய்து கொண்ட மூன்று நாளில் இப்படி ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
