- Home
- Lifestyle
- பிரம்மாண்டமாக நடைபெற்ற OYO நிறுவனர் ரித்தேஷ் அகர்வால் - கீதன்ஷா திருமண வரவேற்பு.. வைரல் போட்டோஸ்
பிரம்மாண்டமாக நடைபெற்ற OYO நிறுவனர் ரித்தேஷ் அகர்வால் - கீதன்ஷா திருமண வரவேற்பு.. வைரல் போட்டோஸ்
OYO நிறுவனர் ரித்தேஷ் அகர்வால் - கீதன்ஷா திருமணத்தில் சாப்ட்பேங்க் சிஇஓ மற்றும் பேடிஎம் நிறுவன தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்தியாவின் முன்னணி விருந்தோம்பல் மற்றும் பயண சேவை நிறுவனமான ஓயோ (oyo) உலகம் முழுவதும் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள 800க்கும் மேற்பட்ட நகரங்களில் தனது சேவையை வழங்கி முன்னணி பிராண்டாக விளங்கி வருகிறது.
29 வயதான OYO நிறுவனர் ரித்தேஷ் அகர்வாலுக்கும், கீதன்ஷாவுக்கும் நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. டெல்லியில் நேற்று நடந்த ஓயோ நிறுவனர் ரித்தேஷ் அகர்வாலின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சாப்ட்பேங்க் தலைவர் மசோயோஷி சன் கலந்துகொண்டார்.
நாட்டின் இளம் கோடீஸ்வரர்களில் ஒருவரான ரித்தேஷ் அகர்வால், 2013 ஆம் ஆண்டு OYO நிறுவனத்தை 19 வயதில் நிறுவினார். ஜப்பானிய நிறுவனமான Softbank அதன் மிகப்பெரிய முதலீட்டாளராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க..பிக் பாஸ் நட்சத்திரத்துக்கு ‘அந்த’ தொல்லை கொடுத்த பிரியங்கா காந்தியின் பிஏ.. வைரலாகும் வீடியோ !!
தொழிலதிபர் கீதன்ஷா சூட்டை நேற்று திருமணம் செய்து கொண்டார். பேடிஎம் (Paytm) இன் விஜய் சேகர் சர்மா மற்றும் லென்ஸ்கார்ட்டின் பெயூஷ் பன்சால் உட்பட பல கார்ப்பரேட் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மத்திய அமைச்சர் பிரஹலாத் படேலும் தம்பதியருடன் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார். மேலும் ரித்தேஷ் அகர்வால் - கீதன்ஷா தம்பதியினர் சமீபத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து ஆசி பெற்றனர்.
கடந்த மாதம், ரித்தேஷ் அகர்வால் தனது தாயார் மற்றும் பின்னர் வருங்கால மனைவியுடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தனது திருமணத்திற்கு அழைத்தார். OYO நிறுவனர் ரித்தேஷ் அகர்வால் - கீதன்ஷா திருமண வரவேற்பு புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க..Kushboo: 8 வயதில் பாலியல் தொல்லை கொடுத்தார் என் தந்தை.. நடிகை குஷ்பு வெளியிட்ட பரபரப்பு தகவல்