உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இந்தியாவிலும் கொரொனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரையிலும் 125 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரபடுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு எச்சரித்திள்ளது. பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரி, திரையரங்குகள் மற்றும் பொது மக்கள் கூடும் முக்கிய இடங்கள் அனைத்தும் முடப்பட்டுள்ளன.

7 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி..! அதிர்ச்சியில் உறைந்த உலக நாடுகள்..!

இந்தநிலையில் தற்போது இந்தியாவில் மேலும் ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 64 வயது மதிக்கத்தக்க ஒருவர் கொரோனா வைரஸ் தாக்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மரணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதன்மூலம் இந்தியாவில் கொரோனா பலி மூன்றாக அதிகரித்துள்ளது. இதற்கு முன்பாக டெல்லியில் ஒருவரும் கர்நாடகாவில் ஒருவரும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.