Pm Narendra modi: நீதி கிடைப்பதில் ஏற்படும் தாமதமே மக்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவால்: பிரதமர் மோடி வேதனை

நாட்டில் நீதி கிடைப்பதில் ஏற்படும் தாமதம்தான் மக்கள் சந்திக்கும் மகிப்பெரிய சவாலாக இருக்கிறது என்று அனைத்து இந்திய சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்ட செயலர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று வேதனை தெரிவித்தார்

Peoples biggest problem is the delay in receiving justice: PM Modi

நாட்டில் நீதி கிடைப்பதில் ஏற்படும் தாமதம்தான் மக்கள் சந்திக்கும் மகிப்பெரிய சவாலாக இருக்கிறது என்று அனைத்து இந்திய சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்ட செயலர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று வேதனை தெரிவித்தார்

அனைத்து மாநிலசட்டத்துறை அமைச்சர்கள்,சட்டத்துறை செயலர்கள் மாநாடு குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டத்தில் உள்ள ஏக்தா நகரில் இன்று தொடங்கியது. இரு நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில் இந்திய சட்டம் மற்றும் நீதிமன்ற முறையில் இருக்கும் பல்வேறுசிக்கல்கள், தீர்வுகள் குறித்து விரிவாக பொதுவானதளத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது. 

விலைமதிப்பில்லாத கோகினூர் வைரத்தை இந்தியாவுக்கு கொண்டுவர முயற்சி தொடரும்: மத்திய அரசு உறுதி

இந்த மாநாடு, பல்வேறு மாநில அமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் புதிய கருத்துக்களைப் பகிரவும், சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றவும், பரஸ்பர ஒத்துழைப்பையும் உண்டாக்க பயன்படுகிறது.
அனைத்து அளவிலும் சட்டகட்டமைப்பை மேம்படுத்துதல், வழக்கில் இல்லாத சட்டங்களை நீக்குதல், நிலுவகையில் இருக்கும் வழக்குகளுக்கு விரைவாக தீர்வுகாண முயற்சி எடுத்தல், மத்தியஅரசு மாநிலஅரசு கூட்டுறவு ஆகியவை குறித்தும ஆலோசிக்கப்படுகிறது

இந்த மாநாட்டை காணொலி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
சட்டங்கள் அனைத்தும் எளிமையான நடையில் உருவாக்கப்பட வேண்டும், ஏழைகள், எளிய மக்களும் சட்டத்தைப் புரிந்துகொள்ளும் விதத்தில் இருக்க வேண்டும். 

உலகப் பட்டினிக் குறியீடு: 121 நாடுகளில் இந்தியாவுக்கு 107-வது இடம்: இலங்கையைவிட மோசம்

நீதிகிடைப்பதில் ஏற்படும் தாமதம் தான் இந்த தேசத்துக்கு மக்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. இதைத் தவிர்க்க ஏராளமான ஆலோசனைகள் தேவை. இந்தியச் சமூகத்தின் சிறப்பு என்னவென்றால் ஆயிரம் ஆண்டுகளாக வளர்ச்சியை நோக்கியே சென்று, நமக்குள் சீர்திருத்தங்களை ஏற்படுத்துகிறோம்

வழக்கில் இல்லாத சட்டங்கள், மூடப் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளை தானாக முன்வந்து நம் சமூகம் அகற்றியது, அவை முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம்

ஆங்கிலேயர் கால சட்டங்களை அகற்றுவதன் மூலம்  அடிமைத்தளைகளை நாம் உடைக்க முடியும், அப்போதுதான் இந்தியா உண்மையான அர்த்தத்தில் முன்னேற முடியும். கடந்த 8 ஆண்டுகளில், மக்களின் வாழ்வை எளிமையாக்க 32,000 சட்டங்களை நீக்கியுள்ளோம்.

மக்கள் ஜனாதிபதி ஏ.பி.ஜே அப்துல் கலாமின் கனவு தூண்டலும், நிறைவேறாத ஆசையும்!

குஜராத்தில் மாலை நேர நீதிமன்றங்களைத் தொடங்கினோம். இந்த நீதிமன்றங்களில் சிறு குற்றங்கள் தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்பட்டன, இதனால் நீதிமன்றங்கள் மீதான பணிச்சுமை குறைகிறது, மற்ற வழக்குகளையும் விரைவாக தீர்க்க அனுமதிக்கிறது. சமூக முன்னேற்றத்துடன் சேர்ந்து சட்டம் மற்றும் ஒழுங்கு ஒத்திசைவாக உருவாகும்போது, நீதி கிடைப்பதில் எளிமை இருப்பதை உறுதி செய்கிறது.

இந்தியாவில் நீதித்துறையின் ஒருங்கிணைந்த பகுதியாக தொழில்நுட்பம் மாறிவிட்டது. காணொலி மூலம் விசாரணை மற்றும் இ-ஃபைலிங் போன்ற சேவைகளில் டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் இந்தியாவில் ஏற்கெனவே நடைமுறைக்கு வந்துவிட்டன,  5ஜி சேவை அறிமுகமாகம்போது இந்த தொழில்நுட்பங்களை மேலும் வலுப்படுத்தும்.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios