பீகார் மாநிலத்தில் பயணிகள் ரயில் ஒட்டுநர் ஒருவர் மது குடிப்பதற்காக ரயிலை ஒருமணி நேரம் நிறுத்தி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் பயணிகள் ரயில் ஒட்டுநர் ஒருவர் மது குடிப்பதற்காக ரயிலை ஒருமணி நேரம் நிறுத்தி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சமஸ்திபூர் ரயில்வே கோட்டத்தின் ஹசன்பூர் ஸ்டேஷனில் உதவி ஓட்டுநர் மது குடிக்கச் சென்றதால் பயணிகள் ரயில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டது. சமஸ்திபூரிலிருந்து சஹர்சா நோக்கிச் சென்ற பயணிகள் ரயில், ஹசன்பூர் நிலையத்தில் சிறிது நேரம் நின்றபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
இந்த நேரத்தில் ரயிலின் உதவி லோகோ பைலட் கரண்வீர் யாதவ் திடீரென்று காணாமல் போயியுள்ளார். மாஸ்டர் உதவி கொடுத்த போதும் ரயில் நகராததால், உதவி நிலைய மாஸ்டர் இது குறித்து விசாரித்த, பிறகு தான் இந்த சம்பவம் தெரியவந்துள்ளது. இதற்கிடையில், ரயில் தாமதமானதால் எரிச்சல் அடைந்த பயணிகள், சலசலப்பை உருவாக்கினர்.

இதுக்குறித்து ரயில்வே போலீசார் தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஓட்டுனரை தொடர்புக்கொண்டுள்ளார்.அப்போது ரயில் ஓட்டுநர் மது குடித்து விட்டு வந்துள்ளார். இதனால் ஒரு மணி நேரம் தாமதமாக சமஸ்திபூரிலிருந்து ரயில் இயக்கப்பட்டது. து குறித்து விசாரணை நடத்த கோட்ட ரயில்வே மேலாளர் அலோக் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் இதே போன்று தேநீர் குடிப்பதற்காக ரயிலை நிறுத்திவிட்டு ஒட்டுநர் சென்ற சிசிடிவி காட்சிகளும் வெளியாகி வைரலானது.
