வந்தே பாரத் ரயிலில் வழங்கபட்ட தயிரில் பச்சை நிறத்தில் பூஞ்சை!
பயணி ஹர்ஷத் டோப்கர், பூஞ்சையான தயிர் வழங்கப்பட்டது பற்றி ட்விட்டர் பக்கத்தில் புகார் கூறியுள்ளார். ரயில்வே அமைச்சகம், வடக்கு ரயில்வே மற்றும் ரயில்வே அமைச்சரின் அதிகாரப்பூர்வ கணக்குகளை டேக் செய்துள்ளார்
வந்தே பாரத் விரைவு வண்டியில் டேராடூனிலிருந்து புது தில்லிக்கு (ஆனந்த் விஹார்) பயணித்த ஒருவருக்கு பூஞ்சை கலந்த தயிர் பரிமாறப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பயணி ஹர்ஷத் டோப்கர், ட்விட்டர் பக்கத்தில் இது பற்றி புகார் கூறியுள்ளார். ரயில்வே அமைச்சகம், வடக்கு ரயில்வே மற்றும் ரயில்வே அமைச்சரின் அதிகாரப்பூர்வ கணக்குகளை டேக் செய்துள்ளார்.
“இன்று எக்சிகியூட்டிவ் வகுப்பில் டேராடூனில் இருந்து ஆனந்த் விஹார் வரை வந்தே பாரதில் பயணம் செய்கிறேன். பரிமாறப்பட்ட தயிரில் பெருமளவு பூஞ்சையாக இருக்கிறது. வந்தே பாரத் ரயிலில் இதை எதிர்பார்க்கவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு மணிநேரத்துக்கு ரூ.1000! தெறிக்கவிடும் பெங்களூரு ப்ரீமியம் பார்க்கிங் கட்டணம்!
அரை மணி நேரத்திற்குள் ரயில்வேயின் அதிகாரப்பூர்வ கணக்கான ரயில்வே சேவா (@railwayseva) பதிலளித்துள்ளது. இதற்கிடையில் ஐ.ஆர்.சி.டி.சி., "உங்குக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கோருகிறோம்" எனத் தெரிவித்துள்ளது.
உடனடியாக இந்த விவகாரம் தொடர்பாக ரயிலில் இருந்த மேற்பார்வையாளர் தலையிட்டு, தயிரை மாற்றிக் கொடுக்க ஏற்பாடு செய்தார். பேக் செய்யப்பட்ட தயிர் காலாவதி தேதிக்கு உள்ளேயே இருந்தது. இருந்தாலும் உள்ளே தயிர் கெட்டுப் போயிருக்கிறது.
இந்த பிரச்சனை தொடர்பாக தயாரிப்பாளரிடம் விசாரணை நடத்தப்படுகிறது என ரயில்வே தரப்பில் கூறப்படுகிறது.
கிராம நத்தம் நிலத்திற்கு ஆன்லைனில் பட்டா மாறுதல் செய்யலாம்! புதிய வழிமுறையை எப்படி?