அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவது குறித்து ஜெட்லீயின் அறிவிப்பை அவர்கள் கட்சிக்காரர்களாலேயே சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தனர்.

 அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவது குறித்து அருண்ஜெட்லி அறிவித்த தொகையை கேட்டு பாராளுமன்ற அரங்கமே சிரித்தது. 

அரசியல் கட்சிகள் அதிகபட்சமாக ஒரு நபரிடமிருந்து ரூ.2000 மட்டுமே பெற முடியும் அதுவும் காசோலை அல்லது டிஜிட்டல் மோடு மூலமாக பெற வேண்டும் என்று அறிவித்தார். இதை கேட்ட சபையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் குலுங்கி குலுங்கி சிரித்தனர்.

அரசியல் கட்சிகள் சாதாரணமாக நன்கொடை பெறுவதே லட்சக்கணக்கில் இருக்கும் போது 2 ஆயிரம் மட்டுமே அனுமதி என்ற அறிவிப்பை பாஜகவினராலேயே நம்ப முடியவில்லை.

இது தவிர அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவது குறித்து மேலும் சில அம்சங்களை ஜெட்லி அறிவித்தார்.