கேரளா பள்ளி ஒன்றில், சுதந்திரதினத்தன்று மோகன் பகவத் சுதந்திர கொடி ஏற்றி வைத்த நிலையில், அம்மாவட்ட ஆட்சிய மேரி குட்டி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் சுதந்திர தின விழா அன்று, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தேசிய கொடியை ஏற்றினார்.

இதற்கு முன்னதாக, மோகன் பகவத், தேசிய கொடியை ஏற்ற கூடாது என, பள்ளி நிர்வாகத்துக்கு ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். இதையும் மீறி, சுதந்திர தினத்தன்று அந்த பள்ளிக்கு வந்த மோகன் பகவத் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். 

இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தேசிய கொடி ஏற்றியது தொடர்பாக விளக்கம் அளிக்கம்படி அந்த பள்ளி நிர்வாகத்துக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். மேலும், பளிளி தலைமை ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யும்படியும் காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டது.

இது தொடர்பாக கேரள மாநில கலாச்சாரத்துறை அமைச்சர் ஏ.கே. பாலன் கூறும்போது, தேசிய கொடியை ஏற்ற அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும், திட்டமிட்டபடி மோகன் பகவத் கொடியை ஏற்றியிருப்பது அரசின் சட்டதிட்டங்களை அவர்கள் எந்த அளவுக்கு மதிக்கிறார்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், பாலக்காடு மாவட்ட ஆட்சியர் மேரி குட்டி பணியிட மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆட்சியர் பணியிட மாற்றம் என்பது வழக்கமானதுதான் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.