இந்தியா உடனான போரில் வெற்றி பெற்றால் நடிகை மாதுரி தீக்ஷித்தை எடுத்துக் கொள்வேன் என பாகிஸ்தானை சேர்ந்த மதகுரு ஒருவர் பேசி உள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
Pakistan Maulana Controversial Comment about Madhuri Dixit : ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். பெரும்பாலானவர்கள் சுற்றுலாப் பயணிகள். இதையடுத்து, சிந்து நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது உட்பட பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல கடும் நடவடிக்கைகளை எடுத்தது. இறக்குமதி நிறுத்தப்பட்டது. எல்லை மூடப்பட்டது. பாகிஸ்தான் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட விசாக்கள் ரத்து செய்யப்பட்டன. பாகிஸ்தான் தலைவர்கள் அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவோம் என்று மிரட்டினர்.
பாகிஸ்தான் மதகுருவின் சர்ச்சை கருத்து
அதே வேளையில் இந்தியப் படைகள் எந்தச் சூழலையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளன. இதனால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூளும் அபாயம் எழுந்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த மதகுரு ஒருவர் தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்து சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பை பெற்று வருகிறது. அவர் பேசிய வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
மாதுரி தீக்ஷித்தை எடுத்துக் கொள்வேன்
அந்த வீடியோவில், மதகுரு ஒருவர் தன் மகன் அருகில் அமர்ந்துகொண்டு பேசுகிறார். அதில், இந்தியாவுக்கு எதிரான போரில் மட்டும் பாகிஸ்தான் வென்றுவிட்டால், மாதுரி தீக்ஷித்தை எடுத்துக் கொள்வேன் என பேசி இருக்கிறார். அவரின் இந்த கருத்து கடும் விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறது. அந்த மதகுருவை நெட்டிசன்கள் கடுமையாக சாடி வருகிறார்கள்.
இந்தியா - பாகிஸ்தான் போர்
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடைசியாக 1999-ல் நடந்தது. கார்கில் போர் என அழைக்கப்பட்ட இது இரண்டு மாதங்களுக்கு மேல் நடந்தது. 1999-ம் ஆண்டு ஜூலை மாதம் இந்த போர் முடிவுக்கு வந்தது. இதன்பின்னர் இருநாடுகளுக்கு இடையேயான பதற்றம் படிப்படியாக தளர்ந்து வந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற பஹல்காம் தாக்குதலால், இரு நாடுகளுக்கு இடையேயான மோதல் மீண்டும் உச்சகட்டத்தை எட்டி உள்ளது.


