MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • ரூ.1,450 கோடி சொத்து! மாதுரி தீட்சித் உடன் கிசுகிசுக்கப்பட்ட ராஜ பரம்பரை கிரிக்கெட் வீரர்!

ரூ.1,450 கோடி சொத்து! மாதுரி தீட்சித் உடன் கிசுகிசுக்கப்பட்ட ராஜ பரம்பரை கிரிக்கெட் வீரர்!

ரூ.1,450 கோடி சொத்து மதிப்பு கொண்ட ராஜ வம்சத்தை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் பாலிவுட் நடிகை மாதுரி தீட்சத் உடன் கிசுகிசுக்கப்பட்டார். இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

2 Min read
Rayar r
Published : Mar 20 2025, 08:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

Ajay Jadeja-Madhuri Dixit love story: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா. ராஜ வம்சத்தை சேர்ந்த இவரின் சொத்து மதிப்பு  ரூ.1,450 கோடி ஆகும். பாலிவுட் மற்றும் கிரிக்கெட்டுக்கு இடையிலான உறவு மிகவும் பழமையானது. பல கிரிக்கெட் வீரர்கள் பாலிவுட் நட்சத்திர நடிகைகளை திருமணம் செய்து கொண்டுள்ளனர். சிலருக்கு வெற்றிகரமான காதல் கதை இருந்தது. சிலருக்கு காதல் தோல்வியில் முடிந்தது. 

24
Ajay Jadeja

Ajay Jadeja

இந்தப் பட்டியலில் அஜய் ஜடேஜாவும் இடம் பெற்றிருந்தார். ஆம்... 90களில் பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித்துக்கும், அஜய் ஜடேஜாவுக்கும் இடையிலான உறவு பற்றிய விவாதங்கள் உச்சத்தில் இருந்தன. பாலிவுட்டில் உச்ச நடிகையாக இருந்த மாதுரியை ஜடேஜா காதலித்து வந்தார். மறுபுறம், மாதுரியும் ஜடேஜாவை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஒரு பத்திரிகை புகைப்படக் காட்சியின் போது மாதுரி தீட்சித் மற்றும் அஜய் ஜடேஜாவின் காதல் கதை தொடங்கியது. 

விவாகரத்துக்கு பிறகு வாழ்க்கையில் சவால், எதிர்கொண்ட அனுபவத்தை பகிர்ந்த ஹர்திக் பாண்டியா!

 

34
Ajay Jadeja cricket carrier

Ajay Jadeja cricket carrier

இருவரும் பத்திரிகையில் ஒன்றாகக் காணப்பட்டனர். டேட்டிங் வதந்திகளும் அதிகரித்தன. அஜய் ஜடேஜா ஒரு அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், திருமணம் என்று வந்தபோது, ​​ஜடேஜாவின் குடும்பத்தினர் அவரது பேச்சைக் கேட்கவில்லை. திருமணத்தை முற்றிலுமாக மறுத்துவிட்டனர். 1999 இல் அஜய் ஜடேஜா மற்றும் மாதுரி தீட்சித்தின் உறவு முடிவுக்கு வந்தது.இதனைத் தொடர்ந்து ஜடேஜாவின் வாழ்க்கையில் மிகப்பெரும் திருப்புமுனை ஏற்பட்டது. 

முகமது அசாருதீனுடனான மேட்ச் பிக்சிங் விவகாரத்தில் ஜடேஜா சிக்கினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் பிறகு மாதுரியின் குடும்பமும் ஜடேஜாவை புறக்கணித்தது. மாதுரி தீட்சத்தும் உறவை முறித்துக் கொண்டு அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். மாதுரி டாக்டர் ஸ்ரீராம் நேனேவை சந்தித்தார். இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மறுபுறம், ஜடேஜாவும் திருமணம் செய்து கொண்டார். 

44
Madhuri Dixit - Ajay Jadeja

Madhuri Dixit - Ajay Jadeja

மேட்ச் பிக்சிங் விவகாரத்தில் அஜய் ஜடேஜாவுக்கு கிரிக்கெட் விளையாட 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. 2001ல் இந்த தடையை நீக்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேட்ச் பிக்சிங் விவகாரத்தால் கிரிக்கெட்டிலிருந்து விலகிய ஜடேஜா Khel, Pal Pal Dil Ke Ssat ஆகிய படங்களில் நடித்தார். மேலும் கிரிக்கட் வண்ணனையிலும், சில அணிகளின் பயிற்சியாளராகவும் அஜய் ஜடேஜா இருந்து வருகிறார்.

அஜய் ஜடேஜா 1992 முதல் 2000 வரை இந்தியாவுக்காக 196 ஒருநாள் மற்றும் 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 6 சதங்களுடன் 5359 ரன்களும், டெஸ்ட்டில் 576 ரன்களும் அடித்துள்ளார். ஜடேஜாவின் தாய் கேரளாவின் ஆலப்புழாவை சேர்ந்தவர். தந்தை தௌலட்சின்ஜி ஜடேஜா, குஜராத்தின் ஜாம் நகர் மக்களவைத் தொகுதியில் மூன்று முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜடேஜாவின் மனைவி அதிதி ஜெட்லியும் அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர் தான். உலகின் பணக்கார கிரிக்கெட் வீரரான ஜடேஜா ஜாம்நகரின் அரச சிம்மாசனத்தின் வாரிசாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

60 கோடி இல்ல, தனஸ்ரீக்கு ஜீவனாம்சம் - யுஸ்வேந்திர சாஹல் எவ்வளவு கொடுக்கணும்?

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
விளையாட்டு
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved