பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் டார்கெட்! எல்லைப் பகுதியில் ஊடுருவ முயலும் பாகிஸ்தான்? எல்லையில் தொடரும் பதற்றம்!
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) மக்கள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக இந்தியப் பகுதிக்குள் நுழைய முயற்சி செய்து வருகிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) மக்கள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக இந்தியப் பகுதிக்குள் நுழைய முயன்ற சம்பவங்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஆனால் அவர்கள் இந்திய துருப்புக்களால் தங்கள் பக்கம் திரும்பிச் செல்லப்பட்டனர். சமீப காலமாக எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக, அதாவது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களுக்கு எல்லையாக கருதப்படும் ஆற்றின் எல்லைக்கு அடிக்கடி வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. ஆனால் இந்திய துருப்புக்கள் விழிப்புடன், அவர்களைத் தங்கள் பக்கம் திரும்பச் சொன்னதாக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் ராணுவத்திடமும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. மணல் அள்ளுதல் மற்றும் கால்நடைகளை மேய்த்தல் போன்ற நடவடிக்கைகளுக்காக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குடிமக்கள் இந்தியா பக்கம் செல்வதைத் தடுக்கும் வகையில், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டிற்கு அப்பால் உள்ள கிராமங்களில் உள்ள மசூதிகளில் இருந்தும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
ஊடுருவல் முயற்சிகளின் முக்கியமாக இதுவும் ஒன்றாக இருப்பதால் இந்திய இராணுவம் இந்த பகுதியில் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பல சந்தர்ப்பங்களில், எல்லைக்கு அடுத்துள்ள கிராமங்கள் பாகிஸ்தான் இராணுவத்தின் ஆதரவுடன் பயங்கரவாதிகளால் ஊடுருவலுக்கு பயன்படுத்தப்படுகின்றன என்பதும் குறிப்பிடவேண்டிய விஷயமாகும்.
இதையும் படிங்க..Explained: தமிழகத்தில் வட இந்தியர்களை குறி வைத்து தாக்கும் தமிழர்கள்.. உண்மையா.? நடப்பது என்ன.? ஓர் அலசல்
கிராமவாசிகள் இந்திய பக்கம் நெருங்கினால், ராணுவ வீரர்களுக்கு பொதுமக்கள் மற்றும் ஊடுருவல்காரர்களை வேறுபடுத்திப் பார்ப்பது கடினம் என்றும், இது இரு நாடுகளுக்கு இடையே பிரச்சினைகளை உருவாக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போர்நிறுத்த ஒப்பந்தத்தை கடைப்பிடித்து வருகின்றன.
அது இரு தரப்பாலும் பெரிய அளவில் கடைபிடிக்கப்பட்டது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு இருபுறமும் அதிக அளவில் இராணுவமயமாக்கப்பட்ட பகுதியாகும். மேலும் சமீபத்தில் பூஞ்ச் செக்டரில் ஒரு கண்ணிவெடி வெடித்ததில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தார் என்பதை அப்பகுதியில் உள்ள ராணுவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க..பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வேலைவாய்ப்பு.. 281 காலியிடங்கள் - விண்ணப்பிப்பது எப்படி.?