சென்னை தமிழர் விமானி அபினந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியது எப்படி என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது. 

பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 விமானங்கள் நேற்று தீவிரவாதிகளின் முகாம்களை தாக்கி அழித்துவிட்டு வெற்றிகரமாக திரும்பின. இது பாகிஸ்தானுக்கு வெறியை ஏற்படுத்தியது. இதனால் பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு காஷ்மீர் எல்லையில் தனது எப்-16 வகை விமானங்களை வானில் வட்டமடித்து பதிலுக்கு இந்தியாவை வெறுப்பேற்றியது. இந்திய எல்லைக்குள் புகுந்து வருவதற்கு 3 எப்-16 விமானங்கள் முயற்சி செய்தன. பாகிஸ்தானின் அத்துமீறலை எதிர்பார்த்து இருந்த இந்திய போர் விமானங்கள் அவற்றுக்கு பதிலடி கொடுக்க தயாராகின.

மொத்தம் ஆறு மிக்-21 வகை போர் விமானங்கள் பாகிஸ்தானின் எப்-16 விமானத்தை இந்திய வான் எல்லைக்குள் வரவிடாமல் விரட்டியடித்தன. வெற்றிகரமாக விரட்டியடித்த பிறகு, அதில் 5 விமானங்கள் தங்களது தளத்திற்கு திரும்பி வந்து விட்டன. ஆனால் ஒரு, மிக்-21 பைசன் வகை விமானம் மட்டும் திரும்பி வரவில்லை. அந்த விமானத்தை விங் கமெண்டரான அபினந்தன் ஓட்டிச் சென்றுள்ளார். 

அதே நேரம் இந்திய வான் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தானின் எப்- 16 ஜெட் விமானங்களில் ஒன்றை, இந்திய மிக் போர் விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது என்று இந்தியா அறிவிதது. அபினந்தன் செலுத்திய விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் சென்றுள்ளது. பாகிஸ்தானின் போர் விமானத்தை விரட்டிச் சென்றபோது தங்கள் வான் எல்லைக்குள் இந்திய, விமானம் வந்ததும் பாகிஸ்தான் தரைப்படை இந்த விமானத்தை சுட்டு வீழ்த்தி உள்ளது.

பொறி வைத்து நமது தமிழகத்தை சேர்ந்த விமானி அபினந்தன் செலுத்திய விமானத்தை, பாகிஸ்தான் தரைப்படை சுட்டு வீழ்த்தியுள்ளது. இந்திய வான் எல்லைக்குள் பாகிஸ்தான் விமானங்கள் வந்து செல்வது இயலாத காரியம் என்பதால், வருவது போல் வந்து போக்கு காட்டிவிட்டு, அவற்றை விரட்டிச் சென்ற இந்திய போர் விமானம் தனது எல்லைக்குள் வந்ததும் குறிபார்த்து சுட்டுள்ளது. அப்போது வெடித்துச் சிதறிய விமானத்தில் இருந்து உயிர் பிழைத்த அபினந்தனை பாகிஸ்தான் ராணும் பிடித்து வைத்துக் கொண்டுள்ளது. 

இப்படித்தான் சென்னையை சேர்ந்த தமிழக வீரரான விங் கமாண்டோ அபிநந்தன் பாகிஸ்தான் படையினரிடம் சிக்கிக் கொண்டுள்ளார்.